பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

சைவ இலக்கிய வரலாறு



யோத்தர புராணக் கூற்றைப்பற்றி, திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள், பட்டினத்தடிகளின் வரலாறும் நூல்களும்என்ற ஆராய்ச்சி நூலில் பட்டினத்தடிகள் புராணமே பழமையானது என்றும், அதன் பின் தோன்றிய நூல்கள் வடமொழிப் புராணத்தைக் குறிக்கின்றன என்றும், பிற்காலத்துத் தமிழ்ப்புலவர்களை தமிழிலை தாம் புதுவ தாகச்செய்யும் புரானங்களையும் பிற நூல்களையும் வட மொழியிலே மொழிபெயர்ப்பித்து அம்மொழி பெயர்ப்புக்கள் தமக்கு மூல நூலென்று உபசாரம் இயம்புவாராயினர் ” என்று குறிக்கின்றார்.

பட்டினத்தடிகள் வரலாற்றிற் காணப்படும் பத்திரகிரியார் வரலாறு பழைய பட்டினத்தடிகள் புராணத்திற் காணப்படவில்லை. ஆயினும் அச்செய்தி வழி வழியாக வந்து கொண்டிருப்பது கருதத்தக்கது. - பிற்காலத்து வரலாற்று நூல்கள் அடிகள் வரலாற்றில் மிகுதியாக எடுத்துக் கூறுவன வருமாறு :

சிவபெருமானுக்குத் தோழரெனப்படும் குபேரனே பட்டினத்தாராகப் பிறந்தார். அவர் வளர்ந்து கல்வி பயின்றதும் சிவபூசை செய்வதில் பெருவிருப்பம் கொண்டு அதனை உபதேசிக்கும் ஆசிரியரைப் பெறாது வருந்தியிருக் கையில், சிவபெருமான் எழுந்தருளி, "நீ திருவெண்காடு அடைந்து சிவனடியாரை வழிபட்டு வருக : நல்லாசிரியன் போந்து நீ விரும்பும் சிவபூசையை நல்குவன் ' எனஉரைத்தருளினார்.

பட்டினத்தார் தமது செல்வமெல்லாவற்றையும் அடியார் பூசையிற் செலவிட்டு வறியராய் விடத் திருவருளாற். பெருஞ் செல்வம் கிடைத்தது. அது கொண்டு அடியார் பூசையை முட்டின்றி நடத்தினார். அக்காளில் தான் அவர் தாயார் விருப்பத்திற் கிணங்கிச் சிதம்பர செட்டியார் மகள் சிவகலை யென்பவளை மணந்தார்,

திருவிடைமருதுரரில் வாழ்ந்த சிவசருமர் என்ற வேதியர் தாம் கண்டெடுத்து வளர்த்த மருதவாணன் என்ற ஆண் மகவைத் தரவே பட்டினத்தடிகள் அதனை வாங்கித் தன் மகனாகக் கருதி வள்ர்த்தார்.