பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

சைவ இலக்கிய வரலாறு

 விலார்க்குக் கல்வி வழங்குவதும் சொற்பல புனைவதும், கற்றன. கொண்டு சொற்போர் செய்வதும் ஆகிய தொழில் கள் பல[1] செல்வரிடையே நிகழ்ந்தன. -

அடிகள் காலத்தே மக்கட்குத் திருமணம் செய்யும் துறையில் பண்டைத் தமிழ் முறையாகிய களவு வழி வந்த கற்பு நெறி நீங்கி விட்டது. பெற்றோரே மகட்குத் தக்க மணமகனைத் தேர்ந்து புணர்க்கும் மணமுறை உண்டாகிவிட்டது. " தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த நன் மனைக்கிழத்தி [2]2 என்பதனால் இது விளங்கும். செல்வத் திற் களித்துத் தீ நெறிச் செல்வோரது நலமின்மையும்,[3] " ஐந்து புலன்களும் ஆரநுகர்ந்து மைந்தரும் ஒக்கலும் மகிழ மனம் மகிழ்ந்து" [4]இல்லிருந்து வாழும் நல்வாழ்வின் நன்மையும் அடிகளால் விரித்துரைக்கப்படுகின்றன.

பழமொழிகளும் பிறநூற் கருத்துக்களும்

பட்டினத்தடிகளுடைய நூல்களில் பழமொழிகள் பல எடுத்தாளப்படுகின்றன. பொற்குன்றம் சேர்ந்த காக்கையும் பொன்னாம்," "குளிகையால் செம்பு பொன்னாகும்" " கருடோபாசனை செய்வோர் கண் பார்வையில் விடம் நீங்கும் ஞாயிற்றொளியின் முன் இருள் கெட்டழியும் " என்பன போலும் பழமொழிகள் அடிகள் பாடலில் குறிக்கப்படுகின்றன[5]. தாமே தளர்வார் மேல் பாரம் வைத்தது போல என்பது உலகியலில் வழங்கும் பழமொழி ; இதனை, "அன்னம் அன்னவரைப் பூமேலணிந்து பிழைக்கச் செய்தார் ஒரு பொட்டுமிட்டார், தாமே தளர்பவரைப் பாரமேற்றுதல் தக்கதன்றே'[6] என அடிகள் கூறுகின்றார்.

இனி, அடிகள் திருக்குறட் கருத்துக்களைப் பல இடங்களில் வைத்தாளுதலில்[7] ஏனைச் சான்றோர்களை ஒக்கின்றாராதலால் அவற்றை விடுத்து ஏனை நூல்களைக் காண்பாம்.


  1. 1. கோயில் நான்மணி20..
  2. 2. திருவிடை. மும். 7.
  3. 3. திருவிடை. மும், 7.
  4. 4. ௸. 19.
  5. 5. திருக்கழுமல. 19.
  6. 6.௸15.
  7. 7.7.௸ - 16.