பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டினத்துப் பிள்ளையார்

385

பொறித்துக் கல்லில்[1] எழுதினான்; பின்னர் அ.து “உய்யக்கொண்டான் திருமலை” என வழங்குவதாயிற்று. விசயநகர வேந்தரான மல்லிகார்ச்சுன மகாராயர் காலத்துக் கல்வெட்டொன்று,[2] “இராசகம்பீர வளநாட்டுத்தென்கரைப் பிரமதேயமான உய்யக் கொண்டான் திருமலை” என்று கூறுகிறது. முதல் இராசராசனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் சோழநாடு பல வளநாடுகளாகப் பிரிக்கப்பெற்றபோது அரிசிலாற்றுக்கும் காவிரிக்கும் இடையில் உள்ள பகுதி[3] “உய்யக் கொண்டார் வளநாடு” எனப்பெயரிடப் பெற்றது.

இனி, அடிகளைப் பட்டினத்துச் சுவாமிகள் என்று வழங்கும் வழக்குப் பற்றி வணிகருட் சிலர், பட்டின சுவாமியென்ற பெயரை மேற்கொண்டு, “பாலையூருடையான் பட்டின சுவாமி” “காளையார் கோயிற் பெருந் தெருப் பட்டின சுவாமிகள்”[4] என அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றனர்.


  1. A. R. No. 457 of 1998.
  2. A. R. No. 474 of 1908.
  3. S. I. I. Vol. XII. p. 178.
  4. S. I. I. Vol. VIII. No. 442 at Pirammalai.
SIV—25