பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேந்தனுர் 389

நூலாராய்ச்சி

சேந்தனர் பாடிய திருவிசைப்பா மூன்றனுள் திருவிழி மிழலைத் திருவிசைப்பா, திருவிழிமிழலேக் கோயிலே விண்ணிழி செழுங் கோயில்' என்று கூறுகிறது. ஒரு கால் திருமால் ஆயிரம் பூக்களேக் கொண்டு இறைவனே அருச்சித்து வழிபடுங்கால், அவற்றுள் ஒன்று குறைபட்ட போது அவர் தமது தாமரை மலர் போன்ற கண்ணே இடந்து குறை நிரப்பி வழிபட்டார் என்றும், அவர்க்குச் சக்கரப் படையை அளிப்பதற்காக இறைவன் எழுந்தரு - ளினர் என்றும், அப்போது அவர் பொருட்டுத் திருமால் விண்ணினின்றும் விமானம் ஒன்றைக் கொணர்ந்திட்டா ரென்றும், அவ் விண்ணினின்றிழிந்த விமானமே விழி மிழலேக் கோயில் என்றும் திருஞான சம்பந்தர், திரு நாவுக்கரையர், நம்பியாரூரர் ஆகிய மூவரும் கூறியுள் ளனர். இக்கருத்தையே எடுத்துச் சேந்தனர், ' புயல் வணற் கருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேக நாயகனை மிகு திருவிழிமிழலே விண்ணிழி செழுங் கோயில்' என்று கூறியிருக்கின்ருர், - திருவிழிமிழலை இறைவனேத் 'திருவிழித் தங்கு சீர்ச் செல்வத் தெய்வத் தான்தோன்றி நம்பி” என்று சேந்த ர்ை கூறுகின்ருர் : திருவிழிமிழலையுடைய இறைவனுக்குத் 'தரன்ருேன்றி பட்டாரர்' என்றும், "தான்ருேன்றி மகாதேவர்' என்றும் பிற்காலத்து ஆன்ருேர் பெயர் சூட்டி வழிபட்டனரென அவ்வூர்க்கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. இத் தான்ருேன்றி' என்னும் பெயரைத் திரு ஞான சம்பந்தர் முதலியோர் கூருமையால், சேந்தனரே திருவிழிமிழலே இறைவனே முதற்கண் இவ்வாறு வழங்கி யுள்ளாரென்று அறியலாம். மேலும், மூவர் பாடிய தேவா ரங்களேயும் திருவாதவூரர் பாடிய திருவாசகம் திருக் கோவையார்களேயும் போல இவருடைய இசைப்பாக்களும்

1. சேந். திருவிசை. 1 : 1. 2. சேங், திருவிசை. 1 : 7.

3. A. R. No. 435 of 1908. 4. A. R, INo. 436 of 1908.