பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 சைவ இலக்கிய வரலாறு

காட்டில் நல்ல செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதற்கு இக் கல்வெட்டுக்களே சான்ருகின்றன.

திருஞான சம்பந்தரும் நாவரசரும் திருவிழிமிழலையில் படிக்காசு பெற்றவரலாற்றைத் திருவிழிமிழலையிலிருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல் கினிர் ' என்று நம்பியாரூரர் கூறுவது போல, சேந்தனர், " பாடலங்காரப் பரிசில் காசருளிப் பழுத்த செந்தமிழ் மலர் சூடி, டேலங்காரத்து எம்பெரு மக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்ருனே "2 என்று கூறி மகிழ்கின்ருர், - தில்லேயில் அந்தணர் மூவாயிரவர் இருந்து இறைவனே வழிபடுவது போலத் திருவிழிமிழலையில் அந்தணர் ஜஞ் ஒாற்றுவர் கூட்டமாய் இருந்து இறைவனே ஏத்து கின்றனர் என்பர். விசயநகர வேந்தர் காலத்தே இவர் களுட் சிலர் திருவாரூர்க் கோயிலிற் பணி செய்தனர் என்றும், அக்காலத்தே அவர்கள் அங்கே செய்த குற்றங் கள் கண்டு மனம் பொருமல் தத்துவப் பிரகாசர் என்பார் 'விழித்துலுக்கு' என்று இவர்களே வைது பாடினரென்றும் தமிழ் நாவலர் சரிதை கூறுவதால் அறிகின்ருேம். -

திருவாவடுதுறை இறைவனைப் பாடிய திருப்பதிகத்தில் நம்பியாரூரர் இந்து சேகரனே' என்ருராக, நம் சேந்த ர்ை, அதனைத் தருணம் என்று ஒர் அடைமொழிகொடுத்து, இளம்பிறை சூடியென்ற பொருள்படுமாறு சிறப்பித்து, 'ஆவடு தண்டுறைத் தருணேந்து சேகரனே என்னுமே ே என்று பாடினர். இச்சிறப்பை உணர்ந்த பண்டையோருட் சிலர் தம் மக்களுக்குத் தருணேந்து சேகரன் என்று பெய ரிட்டு வழங்கினர். திருவாவடுதுறையில் வாழ்ந்த சான்ருேர் ஒருவர் தருணேந்து சேகர பண்டிதர்' என்றும் செங்கற் பட்டு மாவட்டத்திலுள்ள தென்னேரியில் " இராச்சந்துார்த் தருணேந்துசேகரபட்டன் ' என்றும் இருந்திருக்கின்றனர்.

1. சுங். தேவ. 88 : 8. 2. சேக். திருவிசை. 1. 12. 3. சேங், திருவிசைப். 1 : 9. 4. த. நா. சரிதை. 228. 5. சுங். தேவா. 70 : 5. 6. சேங். திருவிசை, 2 : 3. 7. A. R. No. 130 of 1925. 8. S. I. I. Vol. VII. No. 403.