பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394

சைவ இலக்கிய வரலாறு

விழிமிழலைக் கல்வெட்டும் இருவரையும் ஒருவராகக் கோடற் கேற்ற வலியுடையதாக இல்லை; இதைக் கொண்டு திருமாளிகைத் தேவரும் சேந்தனாரும் ஒருவரே என்னாது இருவேறு சான்றோர்களாகக் கொண்டு நிலவும் கேள்வி வழிச்செய்தி தவறுடைய தென்பது பொருத்தமாக இல்லை என்று[1] கூறுகின்றார்.

இனி, இந்தோனேசியாவில் தொல்குடிச் செல்வர் வீடுகளில் திருமணக் காலத்தில் இத் திருப்பல்லாண்டு ஓதப் பெறுகிறதென்றும், இதற்கு அவர்கள் "லாண்டு பாடு" என்று பெயர் கூறுவரென்றும், இது "மான்கடில்” எனத் தொடங்கும் என்றும் மேனாட்டறிஞர்[2] உரைக்கின்றனர். மான்கடில் என்பது திருப்பல்லாண்டின் முதற் பாட்டின் முதற் சீராகிய “மன்னுக தில்லே” என்றதன் சிதைவு.


  1. The Colas. Vol. II. part i. p. 537.
  2. G. K. Vanborough “The peoples in the East Indies”— p. 349-50.