பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398

சைவ இலக்கிய வரலாறு



அருகிலிருந்த அமைச்சர் அறவோர் முதலிய சான்றோர் வேந்தனைத் தடுத்தனர். தமிழ்ப்பாட்டின்பால் உண்டான வேட்கை மிகுதியால் அவ்வாறே வேந்தன் ஏற்பாடுசெய்து கேட்கலுற்றான். “மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய், ஒண்சுடராய்'ஒளியென்னும் ஒருருவம் மூன் றுருவம், மைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ் வடிவோ, செவ்வடிவோ பொன்வடிவோ சிவனேநின் திரு மேனி” எனத் தொடங்கி, ' “ஒரு பெருங் கடவுள் நிற்பரவுதும் எங்கோன், மல்லேவேந்தன் மயிலை காவலன், பல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி, வடவரையளவும் தென் பொதியளவும், விடையுடன் மங்கலவிசயமுன் நடப்ப, ஒருபெருந் தனிக்குடை நீழல், அரசு வீற்றிருக்க அருளுகவெனவே” என்று முடியும் முதற்பாட்டைப்பாடி முடித்ததும் முதற் பந்தர் எரிந்து சாம்பலாயிற்று, இறுதியாகச் சிதைமேல் இருந்து கொண்டு நந்திவன்மன் கேட்கக் கலம்பகத்தின் இறுதியிலுள்ள,

வானுறு மதியை யடைந்ததுன் வதனம்[1]

மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி[2]

கானுறு புலியை அடைந்ததுன் வீரம்[3]

கற்பக மடைந்தவுன் கரங்கள்.[4]

தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்[5]

செந்தழல் புக்கதுன் மேனி[6]

யானுமென் கலியும் எவ்விடம் புகுவேம்

எந்தையே நந்திநாயகனே'[7]









  1. 1. வானுறை மதியிற்புக்க துன்றட்பம்-பா. வே.
  2. 2.வையகமடைந்த துன் கீர்த்தி : மறிகடல் புக்கதுன் பெருமை-பா. வே.
  3. 3.கானுறை புலியிற் புக்க துன் சீற்றம
  4. 4கற்பகம் புக்கதுன் கொடைகள்-பா. வே.
  5. 5.தேனுறை மலராளரியிடம் புகுந்தாள்-பா. வே.
  6. 6.செந்தழல் புகுந்த துன் மேனி : செந்தழலடைந்த துன்றே கம்-பா. வே.
  7. 7. நந்தியே எங்தை பிரானே : நந்தியே ஈந்தயாபரனே-பா. வே.