பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402

சைவ இலக்கிய வரலாறு

 மழியத், தம்பியரெண்ணமெல்லாம் பழுதாக வென்ற தலைமான வீரதுவசன் [1]' என்று கூறுகின்றார்,

இக்கலம்பகம் பாடி அரங்கேற்றம் செய்த காலத்துக் கவியரங்கத்துக்கு இடப்பெற்ற பந்தர் தீப்பற்றிக் கொண்டிருக்கவேண்டும். சின்னாட்குப் பின் நந்திவன்மன் இறந்திருக்க வேண்டும். இவ்விரு செய்திகளையும் ஒன்றுபடுத்திப் பிற்காலத்தே நந்திவன்மனுடைய தம்பியர் பக்கலிருந்து பரிசழிந்தவரோ அவர் வழிவந்தவரோ எவரோ இப்பொய்க் கதையைக் கட்டியிருக்கவேண்டும். . -:

இந் நந்திக் கலம்பகத்தைப் பாடிய ஆசிரியர், சிறந்த சைவராவர். இக்கலம்பகத்தில், பாயிரத்துள் விநாயகனைப் பாடலுற்ற இந்த ஆசிரியர், உமாதேவியை “"மும்மைப் புவனம் முழு தின்ற முதல்வி'”[2] என்றும், இறைவனை ' “விடைப்பாகன் ” என்றும், “பொருப்பரையன் மடப் பாவை புணர்முலையின் முகடுதைத்த, நெருப்புருவம் வெளியாக நீறு அணிந்த வரைமார்ப”[3]' என்றும் பல படியாகப் பாராட்டிக் கூறுகின்றார். நூலின் தொடக்கத்தில், . " . . . -

மண்டலமாய் அம்பரமாய் . .

மாருதமாய் வார்புனலாய்

ஒண்சுடராய் ஒளி யென்னும்

ஒருருவ மூன்றுருவம்

மைவடிவோ வளைவடிவோ

மரகதத்தின் திகழ்வடிவோ

செவ்வடிவோ பொன் வடிவோ

சிவனே நின் திருமேனி[4]

எனவும் பிறவும் கூறுவன அவரது சிவப்பற்றைக் காட்டுகின்றன.


  1. 1. நந்திக். 81.
  2. 2. கந்திக் கலம்பகம். பாயி. 1
  3. 3. ௸ 2.
  4. 4.௸ நூல். 1.