பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நந்திக் கலம்பகம்

405

 சீர் நம்பியப்பி, பொற்பமையச் செய்தான் புரிந்து"1 என்று பாடியுள்ளான். இதனைத் திருத்தணிகை வீரட்டேசுரர் கோயிலில் அங்காளிற் பொறித்து, இதன்கீழ், "இது பெருமானடிகள் தாம் பாடி அருளித்து" என்றொரு குறிப்பும் தரப்பட்டுளது. பெருமானடிகள் என்பது அரசுபுரியும் வேந்தர்களேக் குறிக்கும் பொது நிலைச் சொற்றொடராத2 லால் ஈண்டு அதனால் குறிக்கப்படுபவன் அபராஜித வன்மனாகின்றான். இவனுக்கு இராசமார்த்தாண்டன் என்ற சிறப்பும் உண்டு3. இவன் மனைவி பெயர் மாதேவடிகள் என்பது. திருப்புறம்பயப் போரில் கங்கை வேந்தனான முதற் பிருதிவி பதியைத் துணையாகக் கொண்டு பாண்டியன் வரகுணனை வென்றவனும் இவனேயாவன். விசயாலயன் மகனான முதலாதித்தன் இவனேவென்று இவனுடைய ஆட்சியிலிருந்த தொண்டைநாட்டைத் தனக்குரிய தாக்கிக் கொண்டான். இவ்வாறு பாண்டியன்பால் வெற்றியும் சோழன்பால் தோல்வியும் எய்தி அரசியல் வாழ்வின் சுவைகண்டு உளம்பழுத்த இப் பல்லவ வேந்தன், சிவபெருமான் பாலும் அவற்குத் திருப்பணி செய்து உயர்ந்த சான்றோர்பாலும் பேரன்புபூண்டு தமிழ்த் தொண்டாற்றினான். ஆயினும், இவன் பாடியனவாக இத் திருத்தணிகை விரட்டேசுரர் கோயில் வெண்பா வொன்று தவிர வேறே எவையும் இதுகாறும் கிடைத்தில.

இக்காலத்தே, மதுரைமாவட்டத்தில் மேலுார்ப்பகுதியில் பள்ளி தரையன் என ஒரு சான்றோரும், மதுரைக்கண்மையில் நாகமலைப் பகுதியில் தென்னவன் தமிழவேள் என ஒரு சான்றோரும் இருந்திருக்கின்றனர். இவருள் பள்ளி தரையன் என்பார், "பாண்டியன்கீழ் அதிகாரிகளுள் ஒரு வராய் அவன் பொருட்டுப் பல அரிய பெரிய செயல்களைப் புரிந்தவர் என்றும், அழகிய விமானமொன்று கட்டி முடித்தவர் என்றும், தமிழ்க் கடலைப் பருகிய அகத்


I. A. R. No. 114 of 1925; S. I. I. Vol. XII. No. 94.
2. சாசனத் தமிழ்க்கவி சரிதம். பக். 26.
3. S. I. I. Vol. XII. No. 96.