பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார்

413

 .

கட்டிய ஐவேல் அசதி'[1] எனவும், கொடைநலத்தை, அற்றாரைத்தாங்கிய ஐவேல் அசதி”[2] எனவும் இந்நூல் கூறுகின்றது.

இக்கோவைநூலில், அசதியின் குடியினர் ஆய்ப்பாடி

ஆயர் என்பதை 'ஆய்ப்பாடி ஆயர்தம் ஐவேல் அசதி[3] : என்று ஒளவையார் குறிக்கின்றார், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அரியலூர் சமீன்றாரான அரங்கப்ப மழவராயர் என்பார் சகம் 1652 (கி. பி. 1730)-ல் அரியலூர் திருமால் கோயிலுக்கு வழங்கியசெப்பேடு ஒன்றில்[4] தம்மை ஆய்ப்பாடி கோபால வமிசத்தார்’ என்று. குறிக்கின்றார். கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த, கிருஷ்ணய்ய மழவராயரைப்பாடிய அந்தகக்கவி வீரராகவ முதலியார், " சேய செங்குன்றை வரும் ஒப்பிலாதி[5] என்று கூறுவதால், அரியலூர் ஒப்பிலாத மழவராயர்களுக்கும் திருச்செங்கோட்டுக்கும் தொடர்புண்டு என்பது தெளிவாகிறது. செங்கோட்டைத் திருக்கொடிமாடச் செங்குன்றூர் எனச் சைவத் திருமுறைகள் கூறும். திருச்செங்கோட்டு முருகப்பெருமான் புலவர் பாடும் புகழ்மிகவுடையனாதல் பற்றி வீரராகவ முதலியார், "சேய செங்குன்று' என்றார். இத்திருச் செங்கோட்டைச் சேர்ந்த ஜவேலி ஆயர் களை ஆய்ப்பாடியாயர் என்றே அசதிக்கோவை கூறுகிறது. அரியலூர் சமீன்றார்களான மழவராயர் தம்மை ஆய்ப்பாடி கோபால வமிசத்தாரென்பதையும், அவர்கள் திருச் செங்கோட்டோடு தொடர்புடையர் எனக் கவி வீரராகவனுர் கூறுவதையும் நோக்குமிடத்து, அரியலூர் சமீன்றார்கள் திருச்செங்கோட்டு ஐவேலியைச் சேர்ந்த அசதி என்னும்


  1. 1. தனிச் செய்யுட் சிந்தாமணி. 97.
  2. 2. ௸ 94.
  3. 3. ௸ - 101.
  4. 4. V. Rangacharya's Inscriptions of the Madras Presidency—. Trichinopoly Dt. No. 802. Vide. Mack. Collections: Ins. S. Dis. No. 41. p. 216.
  5. 5. தமிழ் நாவலர் சரிதை. 249.