பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414

சைவ இலக்கிய வரலாறு

 தலைவன் வழித்தொடர்புடையர் என்பது தெற்றென விளங்கு கிறது. அன்று ஒளவையார் புகழும் அமைதிபெற்ற அசதியின் வழி வந்தோராதலின், கொடையும் பிறவிக்குணம் என்பதற்கே அரியலூர் கிருஷ்ணய மழவராயரும் அவர்மகன் குமார ஒப்பிலாத மழவராயனும்[1] கவி வீரராகவனாராற் பாடப்பெறும் பண்பு மேம்பட்டனர் எனக் கோடல் மிகையாகாது.

வரலாற்றாராய்ச்சி

சங்கத்தொகை நூல் காலத்தில் வாழ்ந்த அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஒளவையார் ஒருவர். உண்டு. அவ்வதியமான் ஒருகால் அரிதிற் பெற்ற நெல்லிக்கனியைத் தந்தானாக, அதனை யுண்ட ஒளவையார், “சிறியிலை நெல்லித்தீங்கனி குறியாது, ஆதல் நின்னகத் தடக்கிச், சாதல் நீங்க எமக்கீத்தனேயே”[2] 2 என்று பாடினர். இது கொண்டு அவர் பன்னாள் நெடிது வாழ்ந்தார் எனக்கருதிக்கொண்டு, அவர்பாடியன வாகப்பல பாட்டுக்களும் கதைகளும் நாட்டவர் வழங்கி வருகின்றனர் : அறிஞர் சிலரும் அவற்றை மேற்கொண்டு எழுதியிருக்கின்றனர். அவை பலவும் வேறுவகையால் ஆதரிக்கப்படாமையின், இங்கே குறிக்கப்படாதொழிகின்றன. ஆதரவு பெறும் வரலாறுகள் வருமாறு :

தொண்டை நாட்டில் பழையனூர் என்னுமிடத்தே காரி என்று ஒரு வேளாண் தலைமகன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒளவையார்பால் பெருமதிப்புண்டு. ஒருகால் ஒளவையார் அவன் மனைக்குச் சென்றார். அவன் அப்போது தன் மனைக் கொல்லையில் கையில்களைக் கட்டையேந்திப் பயிர்களிடையே வளர்ந்திருந்த களைகளைக்களைந்துகொண்டிருந்தான். அவன் ஒளவையார் வரக் கண்டதும் பெரு மகிழ்வுற்று அவரோடு பேசியிருந்து விட்டு அவர்க்கு உணவு சமைக்கவேண்டித் தன்மனைக்குட் சென்றான். சென்றவன்


  1. 1. த. கா. சரிதை. 250.
  2. 2. புறம். 91. ,