பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளவையார்

417

 மான் நெல்லிக்காய் ஊறுகாய் ஒன்று தர அதன் சுவை கண்டு பேருவகைகொண்ட ஒளவையார், "“பூங்கமலவாவி சூழ் புல்வேளுர்ப் பூதனையும், ஆங்கு வருபாற் பெண்ணை யாற்றினையும்-ஈங்கு, மறப்பித்தாய் வாளதிகா வன் கூற்றின் நாவை, அறுப்பித்தாய் ஆமலகம் தந்து”[1]! என்று பாடினர்.

சோழ நாட்டுத் திருக்குடங்தையில் மருதன் என்றும் திருத்தங்கி என்றும் வேளாளர் இருவர் வேறு வேறு வாழ்ந்து வந்தனர். இருவரும் பெரிய செல்வராவர் ; இருவர் மனையிலும் வாழை மரங்கள் இருந்தன; எனினும் மருதன் பிறர்க்கு ஈத்துவக்கும் இயல்புடையவன் : திருத்தங்கி, ஈயாது பொருளை ஈட்டித் தொகுப்பதில் இன்புறுபவன். மருதன் மனைக்கு வருவாரும் போவாரும் பலராதலின், அவர்களை உண்பிக்கும் செயலால் மருதன் மனையில் உள்ள வாழை குருத்திலேயே அறுக்கப்படும். அதனால் அவனுடைய மரங்களில் குருத்தோ, இலையோ, பூவோ, காயோ, கனியோ காணப்படவில்லே. இருவர் மனை மரங்களையும் கண்ட ஒளவையார், “திருத்தங்கி தன் வாழை தேம் பழுத்து நிற்கும், மருத்தன் திருக்குடந்தை வாழை-குருத்தும், இலையுமிலைப் பூவுமிலைக் காயுமிலை என்றும், உலகில் வருவிருந்தோடுண்டு”'[2] என்று பாடினர். இச்செய்தியை,

“தாழப் புதைக்கும் திருத்தங்கி
தடங்கா வாழை தனிபழுப்பப்
பாழிப் புயமாலாம் மருத்தன்
பலர்க்கும் உதவும் பான்மையினால்
காழிற் பொலியும் இலை அரிதாய்க்
காயு மரிதாய்க் கனியுமின்றி
வாழைக் குருத்தும் கிடையாத
வளஞ் சேர் சோழ மண்டலமே '”

என்று சோழமண்டல சதகம்[3] குறித்துரைக்கின்றது.



SIW–27 -


  1. 1. தமிழ். நா. சரி. 25.
  2. 2.௸ 58.
  3. 3. சோழ. மண். சத. 65.