பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஔவையார்

419


ஒரு நூல் : இது மொழிக்கு முதலாம் எழுத்துக்களின் அடைவே நாற்சீரடியான் வருவது' என்று உரைத்து, *ஈட்டிய பொருளின் எழுத்தே உடைமை, சிறுமையிற் கல்வி சிலையிலெழுத்தே" என்ற அடிகளைக்காட்டி உள்ளார். அக் கல்வி ஒழுக்கம் என்ற நூல்தானும் இப்போது கிடைப்பதில்லை.

அசதிக் கோவையைப் பற்றிய செய்திகளுள், ஒளவையார் ஐவேலியில் வாழ்ந்த அசதியை ஒருநாள் இரவிற் சென்று கண்டார் என்றும், அக்காலத்தே அவன் அவரை அன்புடன் வரவேற்று உணவளித்துச் சிறப்பித்தான் என்றும், அதனைப் பாராட்டி அவர் அசதிக் கோவையைப் பாடினார் என்றும் கூறுவதுண்டு. ஐவேலியைச் சூழ்ந்த நாட்டை நந்தனாடு என்று அப்பகுதியினர் கூறுவர். அந்த நாட்டுக்கு நந்தமண்டல சதகம் என்று ஒரு சதகம் உளது : அதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அச்சதகம் இச் செய்தியை, - "ஐவேல் அசதி இரவினில் அவ்வைக் கமுதளித்து - மெய்வேதம் போல்நிற்கும் கோவைஐகொண்டோன் புவிமீது தவம் செய்வோன் தனினும் பசுக்காவல் மிக்கெனச் செய்யும் அன்பன் மைவேலைவண்ணன் சதியுடன் வாழ் நந்த மண்டலமே" என்று குறிக்கிறது கொங்குமண்டல சதகம், "தெய்விகமானதமிழ்ப்புலவோர்

கள் தினம் உளங்கொள்
பொய்தீர் உரை எம்பிராட்டியார் 
அவ்வை புனைந்து புகழ்
செய் கோவை ஏற்ற திறலோன் 
அசதி செழித்துவளர்
மைதாழ் பொழில் திகழ் 
ஐவேலியும் கொங்கு 
மண்டலமே" "

என்று கொங்குமண்டல சதகம் கூறுகிறது. <b1. ஆத்திசூடி, கொன்றை வேந்தன்/b>

இவற்றைச் செவ்விய முறையில் ஆராய்ந்து வெளியிட்ட காவலர். திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், பல