பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 சைவ இலக்கிய வரலாறு

பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துக் களும் ஆத்திசூடியிலும் கொன்றை வேந்தனிலும் சிறு சிறு சொற்ருெடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்கு கின்றன; இளம் பருவத்தினர் சுலபமாய்ப் பாடம் செய்து கினேவில் வைத்துக் கொள்ளும்படி அகரம் முதலிய எழுத்துக்களே முறையே முதலில் உடையனவாக அவற் நறின் குத்திரம் போலும் சொற்ருெடர்கள் அமைக் துள்ளன ; ஆத்திசூடி மிகச் சிறிய சொற்ருெடர்களாலும் கொன்றை வேந்தன் சற்றுப்பெரிய சொற்ருெடர்களாலும் ஆக்கப்பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற் கேற்பக் கற்பிக்க வேண்டும் என்னும் கருத்துப் பற்றியாகும். மிக்க இளம் பருவத்தினராயிருக்கும் பொழுதே பிள்ளே களின் மனதில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்கப் பெருங் கருணேயுடனும் பேரறிவுடனும் 'அறஞ் செய விரும்பு' : அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடி, கொன்றைவேங் தன் என்னும் இவற்றின் மாண்பு அளவிடற் பால தன்று" என்று கூறுகின்ருர். - -

இனிச் செந்தமிழாசிரியர் இவை யிரண்டன் பெயரை யும் கூருமல், " அறஞ் செய விரும்பு, அன்னேயும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பன முதலாக வரும் அறவுரை கள் என்று சொல்லி, இஃது இக்காலத்து ஆத்திசூடி என வழங்குவது இச் சங்கத்திற்குக் கிடைத்த உரை யோடு கூடிய இந்நூல் பழைய ஏடு ஒன்றில் இதுவே கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயரான் வழங்கப்பட் டுளது; இந்நூன் முகத்தே தான் கொன்றை வேய்ந்த செல்வன் அடியினே, என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே என்று எழுதப்பட்டுளது ' என்பர். தொல்காப் பியச் செய்யுளியல் உரையில் ஆசிரியர் நச்சினுர்க்கினி

1. திரு. ந. மு. வே. ஆத்திசூடி & கொன்றை வேந்தன்' முன்னுரை.

2. செந்தமிழ். Vol. 11, 7,

3. தொல். பொ. செய்யு. சூ. 72. உரை.