பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 சைவ இலக்கிய வரலாறு

முறையில் கூறப்படுகின்றன. இந் நூலின்கண் திருவைக் தெழுத்தும் திருநீறும் சிறப்பாக எடுத்தோதப் படுவதும் இறுதிச் செய்யுளில் திருக்குறள் திருநான் மறை முடிபு, தேவாரம் முதலிய சைவத் திருமுறைகள் என்னும் இவை யெல்லாம் ஒத்த கருத்துடையன எனக் கூறப்படுவதும் பிறவும் ஆக்கியோரின் சமயத்தையும் உண்மை நூல் உணர்வையும் புலப்படுத்துவனவாகும் ; மூவர் தமிழை எடுத்தோதியதிலிருந்து இந்நூல் தோன்றிய காலம் ஒன்ப தாம் நூற்ருண்டுக்குப் பிற்பட்டதாகும் என்பதும் விளக்க மர்ம்" எனத் திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் கூறுகின்ருர்கள். மூதுரையால் உலகியலுக்குரிய அற வொழுக்கங்களும் நல்வழியால் சமய வொழுக்கங்களும் கூறியிருப்பது இந்நூல்கள் மக்கள் வாழ்க்கை முழுதுக்கும் நலம்புரியும் பணியாகச் செய்ய வேண்டும் என்ற கருத் தோடு ஒளவையார் இவற்றைச் செய்துள்ளார் என்பது தெரிகிறது.

4. விநாயகர் அசுவல்

இதன்கண் முதலில் விநாயகருடைய திருவுருவத்தை விளக்கி இப்பொழுது என்னையாட்கொள்ள வேண்டித். தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி'த் திருவடி தீக்கை முதலியன செய்து யோகஞானங்களே விநாயகப் பெரு மான் நல்கினன் என்றும் முடிவில் தத்துவ கிலேயைத் தந்து எனயாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே' என்றும் ஒளவையார் கூறி முடிக்கின்ருர் சேரமான் பெரு மாளும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கயிலாயம் செல்வது கண்டு தாமும் உடன் செல்ல வேண்டி ஒளவையார் தமது விநாயக வழிபாட்டை விரைவாகச் செய்தார் எனவும், விநாயகர் தோன்றி அவரை அவ் விருவரும் சென்று சேரு முன் சேர்ப்பதாகத் தெரிவித்தார் எனவும், அப்பொழுது ஒளவையார் இந்த அகவலேப் பாடினர் எனவும் கூறுவர். இது பற்றிக் கருத்தைச் செலுத்திய அனவரத விநாயகம் பிள்ளே, நூலே ஆராய்வோமாயின் இக் கதையின் பொருத்த மின்மை நன்கு வெளிப்படும்; அவ்விருவரும்