பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற் கண்ட ராதித்தர்

429

"தோளாண்மை கருதி வரையெடுத்த தூர்த்தன் தோள்வலியும் வாள் வலியும் தொலைவித்து ஆங்கே, நாளொடு வாள் கொடுத்த நம்பன்" என வரும் திருநாவுக்கரசர் திருமொழியை நினைப்பிக்கின்றது.

"களிவானுலகிற் கங்கை நங்கை காதலனே அருள் என்று, ஒளிமால் முன்னே வரங்கிடக்க உன்னடியார்க்கு அருளும் தெளிவாரமுதே"1 என்று கண்டராதித்தர் கூறுவதில், புரங்கடந்தான் அடிகாண்பான் புவிவிண்டு புக்கறியாது, இரங்கிடு எந்தாய் என்று இரப்பத்தன் ஈரடிக்கு என் இரண்டு, கரங்கள் தந்தான் ஒன்று காட்டமற்று ஆங்கதும் காட்டிடு என்று, வரங்கிடந்தான் தில்லேயம்பல முன்றில் அம்மாயவனே"2 என்ற திருக்கோவையார் கருத்து விளங்குகிறது. இவ்வாறே,"அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை விற்றாற்போல்"3 என்ற திருவாசகக் கருத்து, இத்திருவிசைப்பாவில், "நெடியனோடு நான்முகனும் வானவரும் நெருங்கி, முடியால் முடிகண்மோதி யுக்க முழு மணியின் திரளை, அடியார் அலகினல் திரட்டும் அணிதில்லை"4 என்பதில் காணப்படுகிறது.

கண்டராதித்தர்க்குத் தந்தை முதற் பராந்தக சோழதேவர் என்பது முன்பே கூறப்பட்டது. அவரை "மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன்"5 என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன ; நம்பியாண்டார் நம்பிகள், முதற் பராந்தகன் கொங்கு நாட்டினின்றும் பொன் கொணர்ந்து தில்லையம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான் என்று கூறுகின்றார், இச் செய்தியை நம் கண்டராதித்தர், "வெங்கோல் வேந்தன் தென்னாடும் ஈழமும் கொண்ட திறற், செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த, அங்கோல் வளையார் பாடியாடும் அணிதில்லை"6 என்று எடுத்தோதுகின்றார், இந்நிலையில் தமது


1. கண்ட. திருவிசைப். 5.

2. திருக்கோவை. 86.

3. திருவாசக. திருவெம். 18.

4. கண்ட திருவிசைப் 9,

5. A. R. No. 553 of 1920.

6. , ஷை. 8