பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

430

சைவ இலக்கிய வரலாறு

குடிப்பிறப்பையும் அரசியலுரிமையையும், "அம்பலத்தாடி தன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன் கலந்த, ஆராவின் சொல் கண்டராதித்தன்"1என்று நாம் அறியக் குறிக்கின்றார்.

இத் திருவிசைப்பாவைப் பயிலுங்கால் கண்டராதித்தர் இது போலும் திருப்பதிகங்கள்பல இயற்றியிருப்பார் என்ற கருத்து உள்ளத்தே தோன்றுகிறது. இவர்பாடியனவாக வேறு நூல்களோ திருப்பதிகங்களோ இதுகாறும் கிடைத்தில.


1. கண்ட திருவிசைப்பா. 10.