பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நம்பியாண்டார் நம்பி

437

இருந்ததாகத் தெரியவில்லை...ஆகவே அபயகுலசேகரன் என்பது படைத்து மொழிந்த பெயராகக் காணப்படுகிறதேயன்றி உண்மையில் வாழ்ந்த ஒரு சோழ மன்னன் பெயராகப் புலப்படவில்லை.

"இராசராசன் என்னும் பெயருடைய சோழ மன்னர் மூவர் உள்ளனர்; எனினும், வீர ராசேந்திரன்1 விக்கிர மன்2 முதலான சோழ மன்னர்களும் சிலபாண்டி வேந்தர்களும் 3 தம்மை இராசராசன் என்று கூறிக் கொள்வதைக் கல்வெட்டுக்களில் காணலாம். ஆகவே இராசராசன் என்பது அக் காலங்களில் அரசர்கட்குப் பொதுப் பெயராகவும் இருந்தது எனலாம். இந்நிலையில் தெளிவின்றி அமைந்துள்ள இராசராச அபயகுல சேகரன் என்ற தொடர் முதல் இராசராச சோழனேக் குறிக்குமென்று கருதுவது எவ்வாற்றானும் பொருந்தாது என்க."

நம்பியாண்டார் நம்பிகள் திருமுறைகளே வகுத்தபோது, திருமுறைகள் தில்லையில் "இருந்த இடம் மன்றுளாடும் கூர்ந்த இருட்கண்டர் புறக்கடையின் பாங்கர்க் கோல மலர்க் கைகள் அடையாளமாகச் சார்ந்தன" 4 என்று திருமுறை கண்ட புராணம் கூற, திருநாரையூர்த் தலபுராணம் "சிதம்பரத்தில் சிற்சபைக்குப் பக்கத்திலுள்ள அறையில் தேவாரத் திருமுறைகள் முழுவதும்" 5 இருந்தன எனக் குறித்துரைக்கின்றது. . . . . .

சோழ வேந்தனும் நம்பியாண்டார் நம்பிகளும் தேவாரத் திருமுறைகளைக் காணவந்த போது தில்லை வாழந்தணர்கள், "தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும் 6 என்று தடை நிகழ்த்த, நம்பிகளின் அறிவுத் துணையால் வேந்தன் மூவர்க்கும் திருவிழா நிகழ்த்தி அம்மூவர் திரு-


1 .Epi. Indi Vol. XXI. No. 38.

2.Epi. Car. Vol. X (8b).

3.S. I. I. Vol. VIII. No. 247.

4.திருமுறைகண். பு. 12.

5.திருநாரை. தல. 29 : 15.

6.திருமுறை கண். பு: 19.