பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

438

சைவ இலக்கிய வரலாறு

மேனிகளையும் எழுந்தருளச் செய்த அருஞ் செயலேத் திருமுறை கண்ட புராணம் கூறுகிறது; திருநாரையூர்த் தல புராணம் இச்செய்தியை விரித்துக் கூறாமல் நம்பிகள், "சிதம்பரத்தை அடைந்து நடேசப் பெருமானை வணங்கி கோயிற் றிருப்பண்ணியர் விருத்தமென்னும் தமிழ்த் தோத்திரத்தால் பேரன்போடு துதித்தார்; பின்பு மகிழ்ச்சி மிக்க மனமுடைய அரசனால் தேவார ஏடுகளை வெளிப்படுத்தி அவ்வரசன் வேண்டிக் கொண்டபடி தமிழ் வேதங்களைத் திருமுறையாக வகுத்தார்"1 என்று மிக்க சுருக்கமாகக் குறிக்கின்றது.

நம்பியாண்டார் நம்பி செய்த நூல்கள்

நம்பியாண்டார் நம்பிகள், திருகாரையூர் விநாயகர் திரு விரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச்சண்டை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திரு மும்மணிக்கோவை, ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை,ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசர் ஏகாதசமாலை என்ற பத்து நூல்களைப் பாடியிருக்கின்ருர். இவற்றுள், ஆறு நூல்கள் ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞான சம்பந்தர் பொருளாக எழுந்துள்ளமையின், கம்பியாண்டார் நம்பிகட்குத் திருஞான சம்பந்தர்பால் தனித்த முறையில் பேரன்புண்டென்பது தெளியத் தோன்றுகிறது.

நம்பியாண்டார் நம்பி காலம்

நம்பியாண்டார் நம்பி தாம் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் சோழ மன்னனை முதல் ஆதித்தனப் பன்முறையும் பாராட்டிக் கூறுவர்.2 அதனால், அவர் காலம், அவ்வேந்தன் வாழ்ந்த கி. பி. 870-க்கும் 907 க்கும் உள்ள


1. திருகாரை. தலபுரா. 29: 15.

2. திருத்தொண். அங். 50, 65, 82.