பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 சைவ இலக்கிய வரலாறு

பாடிய செய்தியும் சிறப்பிக்கப் பெற்றுள்ளன. நாவ, ரசரைக் கவியோகி என்றும் கற்றுணேயில் வரும் ஆதி என்றும் நம்பிகள் பல்படப் பாராட்டித் தமது பேரன்பைப் புலப்படுத்துகின்ருர், - திருத்தொண்டர் திருவந்தாதி சைவ நெறிக்குரிய வர

லாறு காணும் வகையில் மிக்க சிறப்புற்று நிலவுகிறது. இது, நம்பியாரூரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதலாகக் கொண்டு இயன்றது. திருத் தொண்டத் தொகையில் மிக மிகச் சுருக்கமாகக் குறிக்கப் பெற்ற திருத் தொண்டர் வரலாறுகள் இத் திருவந்தாதிக்கண். சிறிது விரியக் கூறப்பெற்றுள்ளன. திருத்தொண்டர் வரலாற்று வைப்பு முறையும் திருத்தொண்டத்தொகையுள் இருந்தபடியே இத் திருவந்தாதியிலும் மேற்கொள்ளப் பெற்றிருக்கிறது. மேலும், அத் திருத்தொண்டத் தொகை யின் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், 'ஆரூரன் ஆரூரில் அம்மர்னுக்காளே என்று நம்பியாரூரர் பாடி யிருப்பது கொண்டு, ஒவ்வொரு பாட்டிலும் குறிக்கப் பெற்ற தொண்டர் ஒவ்வொருவருக்கும். ஒவ்வொரு பாட் டாகப் பாடிய நம்பிகள் அப்பாட்டில் அடங்கிய தொண் டர்களின் வரலாறு பாடி முடித்ததும் கம்பியாரூரர் வர லாற்றைச் சிறு சிறு பகுதியாக வகுத்து ஒவ்வொன்றை யும் தனித் தனியே பாடியிருக்கின்ருர். திருத்கொண்டத் தொகையில் "தில்லே வாழ் அந்தணர்கள் அடியார்க்கும் அடி யேன்" எனத் தொடங்கும் திருப்பாட்டில் தில்லை வாழ் அந்தணர் முதல் அமர்நீதி நாயனர் ஈருகத் தொண்டர்கள் எழுவர் குறிக்கப் பெறுகின்றனர். நம்பியாண்டார் நம்பி களும் ஏழு பாட்டுக்களில் பாட்டுக்கு ஒருவராக எழுவரை யும் பாடிய பின், எட்டாவது பாட்டில் நம்பியாரூரரை இறைவன் திருமணத்தில் தடுத்தாட்கொண்டவரலாற்றுப் பகுதியைப் பாடியிருக்கின்ருர். இவ்வாறே நம்பியாரூரர் வரலாறு பல பாட்டுக்களால் பாடி முடிக்கப் பெறு கின்றது.