பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 சைவ இலக்கிய வரலாறு

வாணிகத்தை மேற்கொண்டனர்; அவர் சிவப்பற்று. முதிர்த்து துறவுள்ளம் கொண்டு கிராமலே இறைவனேப் பண்டைத் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் முதலி யோரைப் போலப் பாடும் பணியில் சிற்பாராயினர். அக் காலத்தில்தான் அவர் இச் சிராமலேபந்தாதியைப் பாடி அரங்கேற்றினர் கேட்டிருந்த அறிஞருட் பலர் அதன் சொல்நலமும் பொருள்வளமும் கண்டு வியந்து சிராமலேக் கல்லில் அதனேப் பொறிப்பது கன்று எனப் புகன்றுரைத் தனர். அவ்வாறே அது கல்லில் வெட்டப்பட்டது. அதன் இறுதியில், -

' மாட மதுரை, மனலூர் மதில் வேம்பை

யோடமர் சேய்ஞலூர் குண்டுர் இந்-டிேய கற்பதிக்கோன் நாராயணன்கம் சிராமலேமேல் கற்பதித்தான் சொன்ன கவி' என்ற வெண்பாவைப் பாடிப் பொறித்தனர். கல்வெட்டு ஆராய்ச்சியாளர், இந்த அந்தாதியைக்கண்டு கி. பி. 1888-ல் படியெடுத்து, முப்பத்தைந்து ஆண்டு கழித்து 1923-ல் அச்சிட்டு வெளியிட்டனர். -

வரலாறு கர்ண்டற்குதவும் கல்வெட்டுக்களேயும் பிற வற்றையும் கண்டறிந்து வெளியிட்டுப் பொதுமக்கட்கு உணர்த்துவது, அவர் தமது தொல்வரவு தேர்ந்து எதிர் கால வாழ்வைச் செம்மையுற அமைத்துக் கோடற்கு உதவும் என்ற ஒரு கொள்கை மேடுைகளில் சிறந்து நற் பயன் விளேத்திருக்கிறது. நாட்டில் வாழ்வோரை வரலாற் றறிவில்லாத இருணிலே மாக்களாக நிறுத்துவது, அவர் களே ஆள்வோர் தாம் வேட்டவாறு ஆட்டிப் படைக்கலாம் எனத் தீது கருதிய செயலாகும். அது சில நாட்டு அரசியல் வாழ்வில் நிலவியதுண்டு. அதன் பொல்லாத வாடை கம் காட்டிலும் பரங்திருந்தது. அதல்ை கல்வெட்டுக்களும் செப் பேடுகளும் கண்டு வெளியிடும் செயல் ஊக்கமின்றிக் கிடக் தது. வெளிவந்தனவும் பெருவிலே கொண்டு யாவரும் வாங் இப்படிக்கும் கிலேயில் இல்லா தொழிந்தன. அரசியல் உரிமை பெற்ற இந்நாளில் அவையாவும் யாரும் எளிதிற் பயின்று பண்டை வரலாற்றறிவு பெற்றுச் சமுதாயம் பொருளியல்