பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

454

சைவ இலக்கிய வரலாறு

எனப் பிறழக் கொண்டு அதன்மீது பாய்ந்து தன் கூரிய உகிரால் கீறுகிறது; இதனே, “முகிலை, வல்லியம் மால் களிறு என்று தன் வாள் உகிரால் கதுவச் செல்லிழி சாரல் சிராமலை”[1] என்று பாடுகின்றார், பிறிதோரிடத்தில் சிராமலேயில் உள்ள தேக்குமரச் சோலையில் வாழும் வானரங்கள் தவம் புரிந்துறையும் யோகியர் உரைக்கும் மந்திரங்களைக் கற்றுத் தம் மந்திகட்குச் சொல்லி மகிழ்வதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு,

“ஒக்கிய கையோ டொருக்கிய வுள்ளத்து
     யோகியர்தம்
வாக்குயர் மந்திரம் வானரம் கற்று
     மந்திக் குரைக்கும்
தேக்குயர் சாரற் சிராமலைக் கூத்தன்
     செம்பொற் கழன்மேல்
ஆக்கிய சிந்தை யடியர்க் கென்றோஇன்று.

     அரியனவே”[2]

என்றுபடுவது மிக்க இன்பம் தருகிறது.

பழஞ் செய்திகள்

இந்த அந்தாதியில் காணப்படும் பழஞ்செய்திகளுள் சிவனைப் பற்றிக் கூறப்படும் புராணச் செய்திகள் முதலிடம் பெறுகின்றன. அவற்றுள்ளும், சிவன் பிரமன் தலையைக் கொய்தது, காமனை எரித்தது, இரதி சிவ்ன் முன்னின்று புலம்பியது. திருமாலும் அய்னும் அடிமுடி தேடிக்காண முயன்றது, மார்க்கண்டன் பொருட்டுக் காலனக் காய்ந்தது. கண்ணப்பர்க்கு அருள்புரிந்தது முதலியன சிறப்புடையனவாகும். இவ்வாறே, சிவன் கோயில்கொண்டிருக்கும் இடங்களுள் திருக்கற்குடி, தில்லே, திருவொற்றியூர், மருதாடு என்பன சிறப்பாகக் காட்டப்படுகின்றன. இவற்றில் திருக்கற்குடி சிராப்பள்ளிக் கண்மையில் இருப்பது; இவ்வந்தாதி, “குருந்தேய் நறும்பொழிற் கற்குடி”[3]


  1. சிராமலை யந். 15
  2. ௸ 101.
  3. ௸ 75.