பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்பையர்கோன் நாராயணன்

459

தெள்ளலைக்கும் அருவிச் சிராப்பள்ளிச்
        சிவனுக்கு அன்பாய்
உள்ளலுக்கு நன்று நோற்ற தன்றோ
        என்று உணர்நெஞ்சமே”[1]

என்று எடுத்துரைக்கின்றார்.

ஒருகால், அவர், தாம் பாடிப் பரவும் பாட்டுக்களைத் தாமே நோக்குகின்றார்; அவரது புலமைக்கண்ணுக்கு அவை சுவையுடையவாகத் தோன்றவில்லை; ஆயினும் அவரை அறியாமல் அவற்றால் அவர்க்குச் சிவன்பால் அயராத அன்பு தோன்றி அமைதி நல்குகிறது; அதற்குக் காரணம் ஆராய்ந்து, இறைவன் அருட்குணங்களைப் பாரித்துரைக்கும் செய்கையென்பது உணர்ந்து மகிழ்கின்றார். அதனை,

“சொல்லும்பொருளும் சுவையும் பயனும்
        இலவெனினும்
அல்லும் பகலும் மிகுமால் எனக்குப்
        புரமெரிப்பான்
வில்லும் கணையும் தெரிந்த பிரான்தன்
       சிராமலைமேல்
எல்லும் கனைகழ லின்குணம் பாரித்த
        என்கவியே”[2]

என்ற இப்பாட்டு வெளிப்படுத்துகின்றது.

முன்னை ஆசிரியர்களான சேரமானும் பட்டினத்தடிகளும் போல இவரும் தாம் பாடிய அந்தாதியில் துறைப்பாட்டுக்கள் பல தொடுத்துப் பாடியிருக்கின்றார் மறுமையும் வீடுபேறும் வேட்டுப் பா வியற்றிப் பாடி மகிழும் புலமையுள்ளத்தில், இம்மைவாழ்வில், இல்லிருந்து அறம்புரிந்து பொருளும் புகழும் பெறற்கென அமைந்த ஆடவர் மகளிர் இருபாலாரும், அறநெறியில் மனங்கலந்து ஒருமை எய்தி ஒருவர்க்கொருவர் துணைவராய் அமைவது நோக்கமாக வகுக்கப்பட்டது அகப்பொருணெறி; அஃது இப்பாட்டுக்களில் எங்ஙனம் இடம் பெற்றது என்பது தெரிந்திலது. மேனோக்கி எழுதற் கமைந்த பொருளொன்றை மேற்செல்-


  1. 1. சிராமலை யந். 41.
  2. 2. ௸ 81.