பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்பையர்கோன் நாராயணன்

463


“பனிப்படம் போர்த்தனள் பார்மகள் யானும்
        பசலையென்னும்
துனிப்படம் போர்த்து இங்குத்தேன் அங்குத்தார்
        அன்பர் துங்கக் கைம்மா
முனிப்படம் போர்த்த பிரான் சிராப்பள்ளி
        மூடிக்கொண்மூத்
தனிப்படம் போர்க்கும் பருவமன்றோ
        வந்து சந்தித்ததே”[1]

என்று கூறுவது மிக்க இன்பம் தருகிறது.

இனிப் புறத்துறையில் மகள்மறுத் துரைத்தல் என்பது ஒன்று. உலகில் பெண் பெற்றோர்பால் மகட்கொடை வேண்டுவதும், பெற்றோர் இசைந்து கொடை புரிவதும், இசையாது மறுத்தலும் இயல்பு. மகள் மறுத்தவழி, மகட்கொடை வேண்டினோர் வலியராயின் போர்தொடுத்தலும், மெலியராய் இகழ்ந்தவழிமறுத்தோர் போர்மேற்சேறலும் உண்டு. அதனால் இது புறத்துறையில் அடங்கிற்று. ஒரு கால் ஒருவர் மகட்கொடை வேண்டித் தூது விட்டாராக, மறுக்கும் பெற்றோர் கூற்றில் வைத்து, நம் நாராயணனார், “மடக்கோல் வளையிடத்தான் சிராமலை வாழ்த்தலர்போல் படக் கோனிலமன்னர் பாவையைப் பேசிப் பரிசமிட்டார் விடக்கோ கிடந்தன”[2] என்று கூறுவது அவரது மறமாண்பை நாம் அறியக் காட்டுகிறது.

இன்சொல் விளையாட்டு

இனிய சொல்லும் பொருளும் அமைத்துப் படிப்போர் கேட்போர் உள்ளத்தில் நகையும் உவகையும் தோன்றப் பாடுவது இம்முறையில் அடங்கும். சிவன் திரிபுரத்தை எரித்த காலையில் அம்பாய்ப் பயன்பட்டது நெருப்பு; மன்மதன் அவர்மேல் மலரம்பு தொடுத்துக் காமப்போர் தொடுத்த போது அவருடைய கண்ணிடத்துப் பிறந்த தீயே அம்பாய் அவனைத் தாக்கிச் சுட்டெரித்தது. சிவனே யாயினும் வேறு யாவனே யாயினும் போர் மேற்கொண்ட


  1. 1. சிராமலை யந். 31.
  2. 2. ௸ 7.