பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

468

சைவ இலக்கிய வரலாறு


“கண்மலர் நீளம் கனிவாய்
        பவழம் கருங்குழல்கார்
எண்மலர் மூக்கு இளங் கொங்கைகள்
        கோங்கு இடையென்வடிவு என்
உண்மலர் ஆசையின் ஒப்புடைத்து
        அல்குல் ஒண் பொன் மலையான்
தண்மலர் சேர்தனிச் சங்கிடுவாள்
        ஒரு பெண்கொடிக்கே”[1]

என்ற பாட்டின்கண் எண்மலர் மூக்கு என்று குறிக்கின்றார். எள்ளை எண்ணென்றல் இயல்பு.


  1. 1. சி.ய. 45.