பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 திருஞானசம்பந்தர்

51

முன்பு கிறித்து பிறந்த காலத்தவராக இருக்கவேண்டும்[1] என்பர். அறிஞர் ஹூல்ஷ் என்பார்[2] தமிழ்ப்பாட்டுக்கள் பலவும் கரிகாலன் காலத்தும் கோச்செங்கணான் காலத்தும் இயற்றப்பட்டன வென்பது தெளிவாக விளங்குதலால், தேவார ஆசிரியர்களை அவ்விரு பெருவேந்தர்களின் காலத்தவராகக் கொள்வதில் தடையில்லை என்றனர். இற்றைக்கு நாற்பது ஆண்டுகட்கு முன் மனேன்மணிய ஆசிரியரான பேராசிரியர், P. சுந்தரம் பிள்ளையவர்கள் ஞானசம்பந்தர் காலத்தை முதன் முதலாக, அக்காலத்தே தமக்குக் கிடைத்த கருவிகளைக் கொண்டு நேரிய முறையில் ஆராய்ந்து, சங்கரர்,[3] தாம் எழுதிய செளந்தரியலகரி யென்ற நூலில் ஞானசம்பந்தரைக் குறித்துப் பாடியிருப்பதால், ஞானசம்பந்தர் சங்கரர்க்கு முற்பட்டவரென்று நிறுவி, முடிவில் ஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவரெனத் [4] துணிந்துரைத்தார். பின்பு, கல்வெட்டுக்கள் சில குறிப்புக்களை அவர்க்கு உதவின. அவற்றைக் கொண்டு, தாம் ஆராய்ந்து கண்ட காலத்தை முடிந்த முடிபாகப் பின் வருமாறு வற்புறுத்தியுள்ளார். அதன் தமிழ்ப்படி வருமாறு,

“தேவாரத்தில் காஞ்சியில் திருமேற்றளி என்றொரு கோயில் திருநாவுக்கரசரால் பாடப்பெற்றுள்ளது. அத் திருமேற்றளி இருக்குமிடம் தெரியவில்லை. ஒருகால் அதுவே திருக்கற்றளி யெனப்படும் கயிலாசநாதர் கோயிலாயின், ஒரு சிறந்த முடிபு பெறப்படும். கயிலாச-


  1. His letter to Prof. P. Sundaram Pillai,dated 1-3-1895.
  2. S. I. Ins. Vol II. p. 153.
  3. “தவஸ்தன்யம் மன்பே தரணிதர கன்யே ஹ்ருத யத:
    பய: பாராவாரம் பரிவஹதி ஸாரஸ்வத மிதி.
    தயாவத்யா தத்தம் த்ரவிட சிசுராஸ்வாத்ய தவ்யத்
    கவீனாம் ப்ரெளடா நாமஜநி கமநீய: கவயிதா”

    —செளந்தரியல்யகிரி. சு. 76.
  4. Tami. Ant. No, III. p, 59.