பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

சைவ இலக்கிய வரலாறு

வந்து சேர்ந்து சில யாண்டுகள் அங்கு வதிந்தனர். உபநயனச் சடங்கு நடந்தது. வயது ஏழாயிற்று. அப்பர் சுவாமி, பிள்ளையாரை இறைஞ்சுதற்குக் காழி வந்தனர். பின்கண்ட செய்யுள் அக்காலத்து அவர் தேகத்தில் வயது முதிர்ச்சியால் நடுக்கம் இருந்ததைக் காட்டும். அது,

“சிந்தை யிடையறா அன்பும் திருமேனி தனில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும் கையுழவாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும் வடிவிற் பொலி திருநீறும்

அந்தமிலாத் திருவேடத் தரசும் எதிர் வந்தணைய”

என்பது. பிள்ளையாரும் அப்பரும் சில காலம் காழியில் உடன் உறைந்தனர். பிறகு அப்பர் சுவாமிகள் தலயாத்திரை புறப்பட்டனர். பிள்ளையார் காழியில் இருந்து சிவ பெருமான் மீது பலவகைச் சித்திர கவிகளும் பாடினர்.

“பிறகு தல யாத்திரை செய்யப் புறப்பட்டுச் சோழநாடு, மழநாடு, வடகொங்கு, கீழ்கொங்கு, தென்கொங்கு ஆகிய இந்நாடுகளில் நூற்றுக்கணக்கான தலங்களில் சிவபெருமானை வணங்கிப் பதிகம் பாடினர். அந்த யாத்திரையில் திருச்செங்காட்டங்குடி வந்து சேர்ந்தனர். அத்தலம் வருவதற்கு முன் அவர் சென்ற தலங்களில் பெரிய புராணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன நூற்றுக்கு மேலும் உள. பெயர் குறிப்பிடாதன பல நூறென அறியலாம். அநேக தலங்களில் நீண்ட நாள் தங்கியிருந்தனரென்று தெரிகிறது.”

பல அடியார்கள் கூட்டத்துடன் தலயாத்திரை செய்வது, தமிழ்நாடு அக்காலத்திலிருந்த நிலைமையில் கால ஹரணம் ஆகத்கூடியதே; ஒருவாறு கணக்கிடுவதால் திருச்செங்காட்டங்குடி வந்த காலத்துப் பிள்ளையாருக்கு 11 அல்லது 12 வயதாவது நிறைந்திருக்க வேண்டும். பிள்ளையார் வருவதைத் தெரிந்துகொண்டு சிறுத்தொண்ட அடிகள் எதிர்சென்று வணங்கிப் பிள்ளையாரைத் தம்மூர்க்கு அழைத்துச் சென்றனர். பிள்ளையார் சிறுத்தொண்டர் மனையில் அவர் உபசரிக்கத் தங்கியிருந்தனர். திருச்செங்காட்டங்குடிப் பதிகத்தில் சிறுத்தொண்டர்