பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருஞானசம்பந்தர்

79

குமார பாலனான திருவிளையாடல் புரிந்ததும்[1] பிறவும் குறிக்கப்படுகின்றன.

<bஅடியார் வரலாறுகள்b/> இனி, சிவனடியார்களுட் சிலருடைய வரலாற்றுக் குறிப்புக்கள் பல திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களில் காணப்படுகின்றன என முன்பே கூறினோம். அவருள் கண்ணப்பர் கண்ணிடந் தப்பியதும்,[2] தந்தையைத் தாளற வீசிச் சண்டேசுரர் சண்டீசபதம் பெற்றதும்,[3] குலச்சிறையார் அடியவர்களைப் பேணியதும்,[4] சிறுத்தொண்டர் செங்காட்டங்குடியிலிருந்து சிவவழிபாடு செய்ததும்,[5] திருநீலகண்ட யாழ்ப்பாணர் இசைபாடியதும்,[6] நமிநந்தியடிகளும்,[7] திருநீலநக்கர்,[8] மங்கையர்க்கரசியார்,[9] முருகநாயனர்[10] முதலியோர் வழிபட்டதும் பிறவும் ஆங்காங்குக் குறிக்கப்படுகின்றன.

இவ்வண்ணம், தம் காலத்தே தாம் கேட்டனவும் கண்டனவுமாகிய நிகழ்ச்சிகளைக் குறித்துச் செல்லும் திருஞானசம்பந்தர், தம்முடைய வரலாற்றுக் குறிப்புக்களையும் இடையிடையே ஆங்காங்குக் குறித்துள்ளார். தாம் இளமையில் ஞானப்பால் உண்ட குறிப்பைத் திருக்கழுமலத் திருப்பதிகத்திலும்,[11] தம்முடைய தந்தை தம்மைத் தனது தோண்மேல் எடுத்துச் செல்லத் தாம் அவர் தோள்மேல் இருந்தபடியே இறைவனைப்பாடிப் பரவிய குறிப்பைத் திருநனிபள்ளித் திருப்பதிகத்திலும்,[12] தந்தையார் வேள்வி செய்தற் பொருட்டுத் தாம் இறைவனை வேண்டிப் பொன் பெற்றுத் தந்த குறிப்பைத் திருவாவடுதுறைத் திருப்பதிகத்திலும்[13] படிக்காசுபெற்ற குறிப்பைத் திருவிழி-


  1. 1. ஞானசம். 52 : 6.
  2. 2. ஞானசம். 327: 4.
  3. 3 ஷ. 62 : 4.
  4. 4. ஷ. 378: 4, 8
  5. 5 ஷ 321 : 7, 8
  6. 6. ஷ. 62 : 9.
  7. 7. ஷ. 62 : 6.
  8. 8. ஷ. 316 : 11.
  9. 9. ஷ. 378 : 1, 3
  10. 10 ஷ 228: 3.
  11. 11 ஷ 282 : 2.
  12. 12 ஷ 220 : 11
  13. 13 ஷ 262 : 1, 10