பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

சைவ இலக்கிய வரலாறு

பெறும் வரையில் மக்கட்கு நல்லனவாகத் தோன்றும் ; அவ்வலி பெற்றதும், அவை தம்முடைய நலம் குன்றிச் சீரழிவது உலகியலில் இயல்பு. கெளதமருடைய சமயமும் இவ்வாற்றால் சீரழிந்து போயிற்று எனலாம். ஆயினும், அவரது புத்த சமயமும் பிறவுமாகிய வேற்றுச் சமயங் களிடத்து ஞானசம்பந்தருக்குத் தீராத செற்றமுண்டானதற்கு அஃது ஒன்றுமட்டில் காரணமாக முடியாது. அக்கால நிலையினை நாம் தெளிய அறிந்து கோடற்கு வேண்டிய சான்றுகள் நிரம்பக் கிடைக்காத இக்காலத்தில், அதுபற்றி நாம் பலவேறு காரணங்களைக் கற்பித்துக் கொள்வது நேரிதன்று. தெளிவும் மெய்ம்மையும் நிறைந்த சான்று களால், அக்கால நிலை விளங்கப் புலப்படுமாயின், அது கொண்டு உண்மை தெளிந்து நாம் பெருமகிழ்ச்சி கொள்ளலாம் [1] என்று கூறுகின்றார்.

ஞானசம்பந்தர் வேற்றுச் சமயத்தவரைக் குறித்து உரைக்குமிடத்து, அவர்களுடைய தலைவர் பெயர்களைக் குறிக்கினறார். " சந்து சேனனும் இந்து சேனனும் தரும சேனனும் கருமை சேர், கந்து சேனனும் கனக சேனனும் முதலதாகிய பெயர் கொளா? [2] எனவும், 'கனக நந்தியும் புட்ப நந்தியும் பவண நந்தியும் குமணமா, சுனக கந்தியும் குனக நந்தியும் திவண நந்தியும் மொழிகொளா, அனக நந்தியர் [3]' எனவும் கூறுகின்றார். அவர்கள் மதுரைக்கு அண்மையிலுள்ள ஆனைமலை முதலிய இடங்களில் வாழ்ந்தனர்'[4] எனவும், நீறணிந்த சைவர் முதலியோர் வரின், அவர் மேனிபட்ட காற்றுத் தீண்டினாலும் அவர்கள் அது பொருது சினந்து கொண்டு ஒடுவர்[5] எனவும், வேத வேள்விகளை நிந்திப்பர் [6] எனவும், செந்தமிழ் ஆரியம் என்ற இவை அவர்கட்குத் தெரியாது[7] ’ எனவும்,பாகதமே அவர்மொழி[8] யெனவும்,கடுநோன்புடையர் [9]'

எனவும்,


  1. 1. Tam. Ant. III. p. 9.
  2. 2. ஞானசம். 297.
  3. 3. ஞானசம். 297: 4, 6.
  4. 4. ௸ 297: 1.
  5. 5. ௸ 366: 8.
  6. 6. ௸ 366: 1.
  7. 7. ௸ 297: 4.
  8. 8. ௸ 297: 2.
  9. 9. ௸ 361: 10.