பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:88


வேண்டும். பைரவம் மட்டில், ஞானசம்பந்தர் காலத்தில் தான், பையத் தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கிற்று என்பது சிறுத்தொண்டர் வரலாற்றால் தெரிகிறது. இந்த ஆறும் பொதுவாகச் சிவனைவழிபடும் வைதிக சைவத்துக்கு மாறு பட்டன அல்லவாதலாற் போலும், ஞானசம்பந்தர் முதலியோர் அவர்களை ஒதுக்கினரிலர். அவர்களைத் தாம் தழீஇக் கொண்டொழுகிய குறிப்புத் தோன்றவே, ஆறு சமயங்கட்கு ஒருதலைவன்1' எனவும், அத்தலைமையை விளக்கி, "முன்னம் இரு மூன்று சமயங்களவையாகி, பின்னையருள் செய்த பிறையாளன்2" எனவும் கூறியுள்ளார்.

<bதிருப்பதிகங்களிற் காணப்படும் இயற்கை நலம்b/>

இனி, ஞானசம்பந்தர் மருதவளம் சிறந்த பொன்னி நாட்டில் பூமரு சோலைப்"பொன்னியல்மாடம்3"பொலிந்து விளங்கும் சீகாழிப்பதியில் பிறந்து மேம்பட்டவர். நாற்புறமும் நன்செய் வளம் சான்று பூவார் சோலையும் புயல்படு பொழிலும் புள் இடையறாத பூம்பொய்கையும் இன்றும் காண்பார் கண்ணுக்கு இன்பக் காட்சி நல்கும் நலமுடை யது சீகாழி; ஆதலால், ஞானசம்பந்தர் தோன்றி விளங்கிய அன்றும் அஃது. அக்காட்சியை வழங்கியிருக்கும் என்பது ஒருதலை. அன்றியும் அவர் தமிழ்நாடு முற்றும் சிறப் புடைய ஊர்கட்குச் சென்று அவற்றின் இயற்கை நலங்களை நேரிற்கண்ட சீர்த்தியுடையர். ஆங்காங்கு நம் தமிழகம் வழங்கிய இயற்கைக் காட்சிகள் அவருடைய ஞானக்கண்ணுக்கு நல்விருந்து செய்துள்ளன. அவர், இறைவன் புகழைத் தமது உளங்குளிர்ந்தபோதெலாம் உகந்து உரைப்ப 4 வராயினும், அவனை உள்ளுறையாகக் கொண்டு நிலவும் இயற்கையின் இன்பநலமுழுதும் சிறக்க நுகர்ந்து தேக்கெறிபவராவர்.

அவர் பிறந்த சீகாழி அக்காலத்தே கடற்கரையை அடுத்திருந்தது. 'கடல் வாழ் பரதர் மனைக்கே நுண்மூக்கின்-

1. ஞானசம். 131 : 1.
2. ஞானசம். 165 : 5.
3. ஞானசம். 97 : 1.
4 .ஞானசம். 234 : 9.