பக்கம்:சைவ சமயம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 105

களைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் முதலியன காணப்படுகின்றன. ஆயின், தம் கால வரலாற் றுக் குறிப்புக்களை மிகுதியாகத் தரும் சிறப்பு இவர் பால் காணப்படுகிறது.

' கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற

கொடிறன் கோட்புலி' ' மண்ணுலகம் காவல் கொண்ட உரிமையால்

பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் புலியூர்ச்சிற்

- றம்பலத்தெம் பெருமான்' ' கடல்சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன், கழற்சிங்கன் அடியார்க்கும்

அடியேன். '

என்பன போன்றவை வரலாற்றுச் சிறப்புடையன.

மருகல் நாட்டு மருகல், கொண்டல் நாட்டுக் கொண்டல், மிழலை நாட்டு மிழலை, வெண்ணிநாட்டு மிழலை என்ருற் போன்ற தொடர்கள் இவர் காலத் திருந்த நாட்டுப் பிரிவினையை நன்குணர்த்துத லோடு, இவரது நாட்டு அறிவையும் நன்கு விளக்கு வனவாகும். இவர்தம் காலத்துச் சேர, சோழ,பாண் டிய, பல்லவ வேந்தர் நால்வர்க்கும் நண்பராக இருந்தார்; ஆகையால் தமிழகம் முழுமையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பினைப் பெற்ருர். பல தலங்கள் இருந்த நிலையையும், கோவில்கள் சிறப் புற்றிருந்த நிலையையும் இவர் பாடல்கள் நன்கு தெரிவிக்கின்றன. இவரால் குறிக்கப்பட்டுள்ள வைப்புத் தலங்கள் பல அப்ப்ர், சம்பந்தரால் குறிக் கப்படாதவை. எனவே, அவற்றுள் பல-தாழையூர், தக்களுர், தண்டன் தோட்டம், தென்னுர், தஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/104&oldid=678246" இலிருந்து மீள்விக்கப்பட்டது