பக்கம்:சைவ சமயம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 சைவத் திருமுறைகள் - II

களையும் கன்னபரம்பரைச் செய்திகளையும், நாயன் மார் வரலாறுகளை அங்கங்கே குறிக்கும் தில்லைஉலாப் போன்ற பிற நூல்களையும், சமண-பெளத்த சமய நூல்களையும், நாயன்மார் பற்றிய கல்வெட்டுசிற்ப-ஒவியச் சான்றுகளையும் உறுகருவிகளாகக் கொண்டு செய்யப்பெற்றது. இது மொழிப்ெயர்ப்பு நூலன்று. நூலாசிரியர் காலத்தில் நடந்த வரலா றும் அன்று; அவர்க்கு முன்னர் ஏறத்தாழக் கி. பி. 300 முதல் 900 வரை இருந்த நாயன்மார் களைப் பற்றிய வரலாறு. நாயன்மாரோ, வடக்கே காம்பீலியிலிருந்து தெற்கே மதுரை வரைப் பல நாடுகள்ல் வாழ்ந்தவர்-பல காலங்களில் பரந்து பட்டு வாழ்ந்தவர்-பல சாதியார் ஆவர். அப்பெரு மக்களுடைய பிறப்பிடம், சாதி, செய்த சமயத் தொண்டு முதலிய செய்திகளைத் திருமுறைகளை மட்டும் நம்பி எடுக்காமல், தாமும் நன்கு விசாரித்து, பல இடங்கட்கும் நேரில் சென்று ஆராய்ந்து, யாவற்றையும் திரட்டிக்கொண்ட பிறகே நூல் பாடினர் எனக் கருத அவர் நூலிற் பல சான்றுகள் உள. அப்பர் புராணத்தில் குணபர ஈசுவரத்தை யும், சிறுத்தொண்டர் புராணத்தில் வாதாபிப் படை

- யெடுப்பையும் அவர் கூறியிராவிடில், இன்று

அப்பர்-சம்பந்தர் காலத்தை அறிய வேறு வழி இல்லை. சேக்கிழார் சிறந்த சைவர்; பெரும்புலவர்; இவற்றுடன் சோழப் பெருநாட்டின் முதலமைச்சர் ஆதலின், அவரது காவியத்தில் இலக்கிய நயம்வரலாற்று உண்மைகள்-சைவ சித்தாந்த கருத் துக்கள் என்பன அங்கங்கே மிளிர்கின்றன.

சங்க காலத்திற்குப் பிறகு தமிழராய சோழ ராட்சியில் தமிழ்நாட்டு நாயன்மாரைப் பற்றித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/113&oldid=678255" இலிருந்து மீள்விக்கப்பட்டது