பக்கம்:சைவ சமயம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 137

உலோகம், இவற்ருல் ஆகிய கோவில்களைக் கட்டா மல், பல்லவ மன்னர் மலைச்சரிவுகளில் குடைவரைக் கோவில்களை அமைத்தார்கள்; பின்பு பாறை களையே கோவில்களாக அமைத்தார்கள். அவை ஒற்றைக் கல் கோவில்கள் எனப்படும். அவற்றின் பின்னரே செங்கற்களைக் போலக் கருங்கற்களை உடைத்து அவற்றைக் கொண்டு சுவர் எழுப்பிக் கோவில் கட்டத் தொடங்கினர். இங்ங்ணம் அமைக்கப்பட்ட முதற்கோவிலே காஞ்சி கயிலாசநாதர் கோவில். பல்லவ மன்னர் இவ்வாறு கோவில்கள் அமைப்பதிலும் சிற்பங்களையும் ஒவியங்களையும் அமைப்பதிலும் கோவில் ஆட்சி யிலும் கருத்தைச் செலுத்தினமையால், சைவ வைணவ சமயங்கள் நன்கு வளர்ச்சி பெறலாயின. நாயன்மார்கள் நூற்றுக்கணக்கான சிவன்கோவில் களுக்குச் சென்று பதிகங்கள் பாடினர். பண்ணுேடு பாடப்பட்ட அப்பாடல்கள் மக்கள் உள்ளங்களை இழுத்தன. அக்காலத்தில் சைவத்தில் சாதிவேறு

பாடுகள் கவனிக்கப்படவில்லை.

"ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

改Efäl65) 五gh出fsT சடைக்கரந்தார்க்கு அன்பராகில்

அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே' என்னும் அப்பர் வாக்கை நோக்குக. இடை யிடையே அடியாரிடம் சாதி வேறுபாட்டுணர்ச்சி காணப்பட்டது; ஆனால், அஃது அவ்வப்பொழுது மாற்றப்பட்டது என்பதும் நாயன்மார் வரலாறு களால் இனிதுணரப்படும். சாதியற்ற சமுதாயம் தான் ஒன்றுபட்டு வாழ இயலும், சமண சமயத்தி லும் பெளத்த சமயத்திலும் சாதிகள் பேசப்படுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/136&oldid=678278" இலிருந்து மீள்விக்கப்பட்டது