பக்கம்:சைவ சமயம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சைவ சமய வரலாறு

தில்லை. ஆதலால் அவற்றை ஒழிக்கப் புறப்பட்ட சைவமும் வைனமும் சாதி வேறுபாடுகளை முதலில் கவனிக்கவில்லை. குருக்கள் மரபில் பிறந்த சுந்தரர் உருத்திர கணிகையான பரவையாரையும், வேளாளப் பெண்மணியாகிய சங்கிலியாரையும் மணந்துகொண்டமையே இவ்வுண்மையை விளக் கப் போதிய சான்ருகும்.

பெளத்தசமணங்கள் செல்வாக்கிழந்து சைவம் மட்டும் தனியூரசுசெலுத்திய பிற்காலத்தில், சுந்தரர் செய்துகொண்ட திருமணங்கள் இரண்டும் முன் வினைப் பயனுல் நேர்ந்தவை என்று கதை கட்டி விடப்பட்டது. கயிலாயத்தில் சுந்தரர்மீது காதல் கொண்ட இரு மாதரும் நிலவுலகில் சங்கிலியாராக வும் பரவையாராகவும் பிறந்தனர் என்பது அக் கதை. அங்ங்னம் பிறந்தவர்கள் சுந்தரர் தோன் றிய குருக்கள் மரபிலேயே பிறந்திருக்கலாம் அல்லவா? அவர்கள் ஏன் கணிகையர் மரபிலும் வேளாளர் மரபிலும் பிறத்தல் வேண்டும்? இவ் வினுக்களுக்குத் தக்க விடை கிடைத்தலரிது. மேலும், காதலைச் சுவைக்கப் பிறந்தவராகக் கூறப் பட்டவர் காதலைப் போதிய அளவு சுவைக்கவில்லை என்று பெரிய புராணமே கூறுகிறது. சோழர் ஆட்சியில்

சோழர் காலத்தில் கோவில்கள் பெருகின; வழிபாட்டு முறைகள் பெருகின; வழிவழிச் சைவ ரான சோழ மன்னர் எல்லாக் கோவில்களிலும் திருமுறை ஒதுவார்களை நியமிக்க ஏற்பாடு செய் தனர். இராச ராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் பண்பட்ட ஒதுவார் 48 பேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/137&oldid=678279" இலிருந்து மீள்விக்கப்பட்டது