பக்கம்:சைவ சமயம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சைவ சமய வரலாறு

என்பன அறிந்தும், சமுதாயச் சீரழிவிற்கும் சமயச் சீரழிவுக்கும் தாம் காட்டிய சாதிவேறுபாடு களே காரணம் என்பதை அறிந்தும், அக்காலத்து உயர் மக்கள் சுயநல வெறியினுல் சாதிகளை ஒழிக்க முன் வரவில்லை. ' சமயத்தில் நாங்கள் தலையிட மாட்டோம்" என்ற ஆங்கிலேயர் வாக்குறுதி இவ் வுயர்ந்தவர் கொடுமைகளுக்கு அரண் செய்வது போல் அமைந்தது. மேன்மேலும் சாதிவெறி தலை தூக்கியது. கோவிலின் கருவறையில் இன்ன வகுப்பார் இருந்து வழிபடலாம், கருவறைக்கு வெளியே இன்ன வகுப்பார் நின்று வழிபடலாம், கோவிலுக்குள்ளே இன்ன வகுப்பார் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் வளர்ந்தன.

முற்போக்கு

ஆங்கிலக் கல்வி நாடெங்கும் பரவத் தொடங் கியது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் சாதிகள் இல்லை என்பதைப் படித்தவர் உணர்ந் தனர்; சாதிகள் இறைவனுல் உண்டாக்கப்பட்டவை என்று தமக்கு மேலோர் கூறிவந்த கூற்று முழுப் பொய் என்பதை உணர்ந்தனர். அவ்வுணர்ச்சியே நமது சமுதாய மறுமலர்ச்சிக்கு அடிப்படை. நாடெங்கும் இவ்வுணர்ச்சி வளரத் தலைபட்டது. காந்தியடிகள் சாதி ஒழிப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்; தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனித உரிமையை அளித்தார். அவர்களுக்கும் கோவில் நுழைவு கிடைத்தது. இங்ங்ணம் பெரியோர் பலர் முயற்சியின் பயனுக, இன்று கோவிலுள் சாதி வேறுபாடு காண்பது என்பது நிறுத்தப்பட்டது. ஆயினும் சமயம் சீர்திருந்தியதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/141&oldid=678283" இலிருந்து மீள்விக்கப்பட்டது