பக்கம்:சைவ சமயம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமயம் 145

வைத்தனர்; அறிவிலும் ஒழுக்கத்திலும் சமய சாத்திரக் கல்வியிலும் முதிர்ந்த பெருமக்களை மடத்துத் தலைவர்களாக வைத்தனர். பிற் காலத்தில் இந் நிலை மாறியது. மடாதிபதி ஜமீனை ஆட்சி புரியும் ஜமீன்தாரைப் போல மடத்துக்குரிய வரவு செலவுகளிலும் வழக்கு களிலும் பெரும் பொழுதைப் போக்கத் தொடங் கினர். ஒரு சிலர் ஒழுக்கம் தவறியும் நடக்கத் தலைப்பட்டனர். எனவே, கால வேறுபாட்டாலும் மடங்களின் நிலை வேறுபாட்டாலும் அரசியல் மாற்றத்தாலும் சைவசமய பிரச்சாரம் இல்லாமை யாலும் பொதுமக்களுக்கும் சைவ மடங்களுக்கும் தொடர்பு ஏற்படவில்லை. பொது மக்களுக்குப் பொருள் விளங்காத நிலையில் சில நூல்களை அச் சிட்டு வெளிப்படுத்தலும், படித்த ஒரு சிலருக்குப் பொன்னடை போர்த்தலும், ஆண்டு விழாக்களில் சமயச் சொற்பொழிவு செய்வோருக்குச் சிறிது பொருள் கொடுப்பதுமே மடங்கள் செய்யும் சைவப் பணிகளாக இருந்துவந்தன. இன்று இந்த நிலை மாறி, இவற்ருேடு பொது மக்களுக்குப் பள்ளிக் கூடம் வைத்தல், மருத்துவ நிலையம் அமைத்தல், திருக்குறள் போன்ற அரிய நூல்களை வெளியிடு தல் முதலிய தொண்டுகளில் மடங்கள் இறங்கியுள் ளமை வரவேற்கத்தக்கது.

மடங்கள் செய்யவேண்டுவன

1. பொது மக்களுக்குப் புரியும் வகையில்எளிய வகையில் சைவசமய வரலாறு, சைவ சம யக் கொள்கைகள், சைவம் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ள தன்மை, திருக்கோவில் களின் சிறப்பு, அவற்றை மக்கள் பயன்படுத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/144&oldid=678286" இலிருந்து மீள்விக்கப்பட்டது