பக்கம்:சைவ சமயம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சைவ சமய வரலாறு

முறை, சைவ சித்தாந்தத்தின் தெளிவான கருத்துஇவற்றைச் சிறுசிறு நூல்களாக வெளியிட்டுப் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். 2. சைவ சமயத்தில் சாதிவேறுபாடு இல்லை. என்பதை வற்புறுத்திச் சட்டம் கொண்டுவரப்படல் வேண்டும். எல்லோரும் ஒரே பந்தியில் உட்கார்ந்து உணவு கொள்ளும் முறை கையாளப்படுதல் வேண்டும். சாதி ஒழிப்புச் சட்டம் வரும் வரையிற் சைவர்க்குள் கலப்புமணம் வளர்தல் வேண்டும்.

3. பல சிற்றுரர்களில் தொடக்க நிலைப்பள்ளி களைத் தோற்றுவித்துச் சைவப் பிள்ளைகட்கு இல வசத் கல்வி அளிக்க வேண்டும். அப்பள்ளிகளில் சிறுவர்க்குச் சமய அறிவு கற்பிக்கப்படல் வேண் டும். அச்சிற்றுரர்களில் மருத்துவ மனைகள், படிப் பகங்கள், நூல் நிலையங்கள் முதலியவற்றை அமைத் துப் பொதுமக்களுக்கும் மடத்துக்கும் தொடர்பு உண்டாக்குதல் வேண்டும். ஏழாயிரம் மைல்களுக் கப்பாலிருந்து இந்நாட்டுக்கு வந்த கிறித்துவப் பாதிரியார்கள் இவற்றைச் செய்தமையாற்ருன் தங் கள் சமயத்தை வளர்த்தனர் என்ற உண்மையை நாம் உணர்தல் வேண்டும்.

4. ஆங்கில அறிவும், தமிழ் அறிவும் பெற்ற சமயப் பிரசாரகரை நியமித்து ஒவ்வொரு மடமும் மக்களிடைச் சமயப்பிரசாரம் செய்வித்தல்வேண்டும். வீணுனவையும் வாழ்க்கைக்குப் பயன் படாதனவு மான கதைகளைச் சொல்லி மக்களை மேலும் மூடர் களாக்காமல் சமய நெறியில் வாழ வழி அமைத்துத் தருதல் வேண்டும். -

5. 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல" என்ற முறை பற்றிப் பொதுமக்களுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/145&oldid=678287" இலிருந்து மீள்விக்கப்பட்டது