பக்கம்:சைவ சமயம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r 148 சைவ சமய வரலாறு மடங்களின் தலைவர்களும், சைவப் பெருமக்களும் இத்துறையில் உடனே கவனம் செலுத்துதல் வேண்டும். அறிவும் ஆராய்ச்சியும் கேள்வி கேட் கும் திறனும் பெருகிவரும் இக்காலத்தில், அறிவுக் குப் பொருந்த நடப்பதே சமயவளர்ச்சிக்கு ஏற்றது. பொது மக்கள் தொண்டு சைவ மக்கள் தங்கள் இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சைவப் பெயர்கள் வைப்பது நல்லது. சிவநெறிச் செல்வன், தேவாரச் செல் வன், நெடுமாறன், கோட்புலி, சண்ணப்பன், கழற் சிங்கன் என்ருற்போல நாயன்மார் பெயர்களையும் திருமுறைகளில் வரும் அரும் பெயர்களையும் வைத்து வழங்குதல் பழமையைப் புதுப்பித்து நிலைக்கச்செய்வதாகும். இவ்வாறே பெண் பிள்ளை களுக்கு மங்கையர்க்கரசி, சிவ அரசி, வெண்காட்டு நங்கை, சந்தன நங்கை முதலிய சைவப் பெயர்களை 6a 6aléᏋᏜ56āXIT LᏝ , - சைவர் தம் ஊர்களில் ஏற்படும் புதிய தெருக் களுக்குச் சேக்கிழார் தெரு, சம்பந்தர் தெரு, ஆலால சுந்தரர் தெரு, எனச் சைவப் பெயர்களே வைக்க ஏற்பாடு செய்யலாம். இவ்வாறே தம் வள மனைகளுக்குச் சேக்கிழார் அகம் சுந்தரர் அகம் எனப் பெயர்களைச் சூட்டலாம். : - சிவநெறிச் செல்வரும் சைவ சங்கங்களும் சைவ சமய வரலாறு, சைவப் பெயர்கள், பாரா யணத்திற்குரிய பதிகங்கள் போன்றவற்றைச் சிறு நூல்களாக எழுதச் செய்து இலவசமாகவோ, குறைந்த விலையிலோ பரப்புதல் வேண்டும்; அடிக் கடி தக்காரைக் கொண்டு, இக்காலத்திற்கு ஏற்ற முறையில், சொற்பொழிவுகளின் வாயிலாகச் சைவ சமயப் பற்றை ஊட்டுதல் வேண்டும் ; வாழ்க்கைக் கும் சமயத்திற்கும் உள்ள தொடர்பை தெரிவித் தலே மிக்க பயனுடைய சொற்பொழிவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/147&oldid=849249" இலிருந்து மீள்விக்கப்பட்டது