பக்கம்:சைவ சமயம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பல்லவர் காலத்தில் சைவசமயம்

கொண்டே இறைவனைப் பாடியாடிப் பரவுவதாலும் முத்தி அடையலாம் என்னும் பக்திநெறிப்போதனை இல்லறத்தார் உள்ளங்களைக் கவர்ந்தது. மக்கள் பண்ணிறைந்த பாடல்களைப் பாடியும் ஆடியும் இறைவனை வழிபடலாயினர். இவ்வாறு எல்லோரும் எளிதிற் பின்பற்றும்படியான பக்தி நெறியை நாயன்மார் போதித்தமையாற்ருன் சைவசமயம் நாட்டில் நன்கு பரவலாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/45&oldid=678187" இலிருந்து மீள்விக்கப்பட்டது