பக்கம்:சைவ சமயம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சோழர் காலத்தில் சைவ சமயம் (கி. பி. 900-1800)

வட இந்தியாவில் சைவ சமயம்

சோழர்கள் பேரரசை ஏற்படுத்தி ஆண்ட நானூறு ஆண்டு காலம் (கி. பி. 900-1800) இந்தியா முழுவதும் சைவசமயம் நன்கு வளர்ந்த காலமாகும். காஷ்மீர் நாட்டில் பல சிவன் கோவில்கள் சிறப்புற் றிருந்தன. கோவில்களை அடுத்து மடங்களும் தோன்றி வளர்ந்தன.

நேபாள நாடு அசோகருக்கு முன்பிருந்தே பெரிய சைவமடத்தைப்பெற்ற நாடாக இருந்தது. அங்குள்ள பசுபதி கோவிலும் அதனைச் சார்ந்த சைவமடமும் சிவாசாரியார் பலரைத் தோற்று வித்தன.

கூர்ச்சாம், கத்தியவார் நாடுகளிலும் சிவன் கோவில்கள் சிறப்புற்றிருந்தன. அப்பகுதியை யாண்ட சாளுக்கிய மன்னர்கள் லகுலீச பரசுபத ஆசார்யர்களைத் தாங்கள் கட்டிய மடங்களின் தலை வர்களாக வைத்தனர்; அவர்களிடம் தீட்சை பெற் றுத் தங்களைப் பரம மாகேசுவரர் ' என்று கூறிக்கொண்டனர்; தங்கள் கல்வெட்டுத் தொடக் கத்தில் ஓம் நமசிவாய' என்று எழுதினர். இவர் தம் ஆட்சியில் லகுலீசர் தோன்றிய காரோண நகர் சிறப்புற்றது. லகுலீச பாசுபதரும் சிறப்புற்றனர். * லகுலீசபாசுபதர்களின் தொடர்புடைய கோவில்களே நாகைக் காரோணம், குடந்தைக் காரோணம், கச்சிக் காரோணம் என்பன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/46&oldid=678188" இலிருந்து மீள்விக்கப்பட்டது