பக்கம்:சைவ சமயம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 61.

றிருந்தனர். இத் திருச்சுற்றுக் கோவில்கள் சில கோவில்களில் தனித்திருந்தன் சில கோவில்களில் மதிலை யொட்டி அமைந்த கட்டிடத்திற்குள் இருந் தன. மதில், ஒன்று முதல் நான்கு வாயில்கள் வரை கோவிலுக்கு ஏற்றவாறு பெற்றிருந்தது. வாயில் மீது சிறிய கோபுரங்கள் எழுந்தன. முத லாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலம்வரை கருவறைக்கு மேலுள்ள விமானமே வானளாவக் கட்டப்பட்டது. பிற்காலங்களில் விமா னம் தாழ்த்தப்பட்டுக் கோபுரங்கள் உயர்த்தப் பட்டன. கோவிலைச் சுற்றிலும் பல இடங்களில் நந்தவனங்கள் ஏற்பட்டன. சில இடங்களில் கோவிலுக்குள்ளும் நந்தவனங்கள் உண்டாக்கப் பட்டன. பெரிய கோவில்களில் திருக்குளங்களும் இவ்வாறே தோண்டப்பட்டன. பெரிய கோவில் களில் இரண்டு முதலிய திருச்சுற்றுக்கள் கட்டப் பட்டன. அவற்றில் நாடாண்ட அரசர்களும் சிற் றரசர்களும் பிறரும் எடுப்பித்த சிறிய கோவில்கள் நாளடைவில் இடம் பெற்றன. மண்டபங்கள்

கோவில்களின் செல்வாக்குப் பெருகப் பெருக நாளடைவில் அவற்றுள் பல மண்டபங்கள் ஏற் பட்டன. செங்காட்டங் குடியில் சிறுத்தொண்ட நம்பி மண்டபம் , திருவெற்றியூர்க் கோவிலில் வக்காணிக்கும் மண்டபம் (சமய வாதம் புரியும் மண்டபம்), மண்ணைக்கொண்ட சோழன், இராச ராசன் ', ' இராசேந்திரன்' என்ற பெயர்களைக் கொண்ட மண்டபங்கள், இலக்கண விளக்க மண்டபம் , என்பன இருந்தன. நடன மண்டபம், நாடக மண்டபம், திருப்பதிகம் பாடவும் எழுதவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/60&oldid=678202" இலிருந்து மீள்விக்கப்பட்டது