பக்கம்:சைவ சமயம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கல்வெட்டுக்களும் சைவசமயமும்

செப்பேடுகளிலும் எழுதப்பட்டன. பாடல் பெற்ற கோவில்களில் எல்லாம் திருப்பதிகங்கள் பாடும் ஒதுவார் நியமிக்கப்பட்டனர். இசையோடு பொரு ளுணர்ந்து பாடத்தக்க ஒதுவார்கள் நியமனம் பெற் றனர். திருவெற்றியூர்க் கோவிலில் தேவரடியார் பதினறு பேர் திருப்பதிகம் ஒதினர். திருஆமாத் துTரில் குருடர் 16 பேர் ஒதுவராக இருந்தனர். திருத்தவத்துறையில் பிராமணர் இருவர் தேவாரம் ஒதினர். தஞ்சைப் பெரிய கோவிலில் 48 பேர் திருப் பதிகம் விண்ணப்பம் செய்தனர். இவ்வாறு பெரும் பாலான கோவில்களில் திருப்பதிகங்கள் ஒதப்பட்டு வந்தன. ஓதுவார்களை மேற்பார்வையிடத் தேவார நாய்கம் என்ற அரசாங்க உயர் அலுவலாளர் ஒருவர் இருந்தார் என்பது தெரிகின்றது. பெரிய கோவில்களில் திருக்கைக் கோட்டி ' என்னும் பெயர் கொண்ட மண்டபங்கள் இருந்தன. அவற் றுள் திருமுறை நூல்கள் வைத்துப் பாதுகாக்கப் பட்டன. அழிந்தவற்றைப் புதுப்பிக்கவும், ஏடு களைப் பூசிக்கவும் அவற்றை மேற்பார்வையிடவும் ஒருவரிருந்தார். அவர் 'தமிழ் விரகர்' எனப்பட்டார். அவருக்கு மானியம் விடப்பட்டிருந்தது. சீகாழி, திருக்காராயில், திருவிழிமிழலை, திருவுசாத்தானம் போன்ற கோவில்களில் இத்தகைய மண்டடங்கள் இருந்தன என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. நாயன்மார் திருமேனிகள் --

ஒவ்வொரு நாயனரும் வாழ்ந்துமறைந்த ஊரில் உள்ள சிவன் கோவிலில் அவருக்குச் செம்பிலும் கல்லிலும் உருவங்கள் அமைக்கப்பட்டன : அவ் வுருவங்கள் பூசிக்கப்பட்டன. அவருக்கு விழா நடைபெற்றது. அப்பர், சம்பந்தர், சுந்தரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/73&oldid=678215" இலிருந்து மீள்விக்கப்பட்டது