பக்கம்:சைவ சமயம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் . 77

திருவெண்காட்டு நங்கை, கண்ணப்ப தேவர்,ஐயாற் றடிகள், புகழ்த்துணையடிகள், காரிவேளார், கோட் புலி, சிங்கன் கலியன், காமன் தாயன், ஆரூரன் கம்பன், நம்பிவிடங்கன், அணுக்க வன்ருெண்டன், உடைய நம்பி, கலையன் குமரன், ஆலால சுந்தரப் பல்லவரையன், தண்டியடிகள், கம்பன் மதுராந்த கன், திருநீலகண்டன், இளையான்குடி கிழவன், கலியன் மன்ருடி, பரசமயகோளரி, மானி, கலையன் மாணிக்கம் போன்ற எண்ணிறந்த பெயர்கள் கல் வெட்டுக்களில் காணப்படுகின்றன.

அக்காலச் சைவ மக்கள் நாயன்மார் பெயர் களைத் தம் பிள்ளை கட்கு வழங்கியதோடு மட்டும் நில்லாது, இடங்களுக்கும் அப்பெருமான்களின் பெயர்களை இட்டு வழங்கினர் என்பது கல்வெட்டுக் கள் உணர்த்தும் செய்தியாகும். கண்ணப்ப தேவர் கமுகந்தோப்பு, திருஞான சம்பந்த நல்லூர், திரு ஞானசம்பந்த மங்கலம் என்னும் இடப்பெயர்கள் இங்குக் குறிக்கத்தக்கவை. பல மடங்களின் பெயர் கள் நாயன்மார் பெயர்களைத்தாங்கியிருந்தன. பரஞ் சோதி மடம், திருவரசீசன் மடம், தில்லைவாழ் அந்தணர் மடம், நம்பி திருமுருகன் திருமடம், நமிநந்தியடிகள் மடம், பரசமயகோளரி மடம், திருத் தொண்டத் தொகையான் திருமடம், திருமூலதேவர் மடம், சிறுத்தொண்டர் திருமடம் என்பன குறிக்கத்தக்கவை. திருமுறைகளும் மக்களும்

அக்கால மக்கள் திருமுறைகளிடம் கொண்டி

ருந்த அளப்பரிய பற்றைப் பின்வரும் மக்கட்பெயர் களும், ஊர்ப் பெயர்களும் நன்குணர்த்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/76&oldid=678218" இலிருந்து மீள்விக்கப்பட்டது