பக்கம்:சைவ சமயம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 85

ஊரார்க்குக் கடனுக உதவுவதும், பஞ்சம் நீங்கிய பிறகு உதவிய கடனை மீட்டுப் பெறுவதும் வழக்க மாக இருந்தது என்பது ஆலங்குடிக் கல்வெட்டால் தெரிகின்றது. ,参数

இங்ங்ணம் கோவில்கள் பொருளாதாரத் துறை யிலும், உடல்நலத் துறையிலும், அறிவுத் துறையி லும், சமயத் துறையிலும் பொது மக்களுக்குத் தொண்டு செய்துவந்தமையாற்ருன், தமிழகத்தில் சைவ சமயம் மக்களுக்குப் பயன்படத்தக்க சமயமாக விளங்கியது. இப்பண்டை நிலை மீண்டும் புதுப்பிக், கப்படுமாயின், சைவ சமயம் மக்கள் சமயமா மலர்ச்சிபெறும். திருக்கோவில் வழிபாடும் தாய் மொ யில் நடைபெறுதல் வேண்டும். திருவொற்றியூர்க் கல்வெட்டில் கண்டபடி, திருப்பதிகங்கள், திருவாச கம் இவற்றின் கருத்துக்களைப் புலப்படுத்தும் நடன வகைகளும் வளர்ச்சி பெறுதல் வேண்டும். தமிழ் நடன ஆசிரியர்களும், தமிழ் நடனப் பெண்மணி களும் இத்துறையில் விரைந்து கவனஞ் செலுத்த

வேண்டும்.

இந்நிலை ஒவ்வொரு கோவிலிலும் ஏற்படுமா யின், நம் திருமுறைகளின் உண்மைச் சிறப்பினை மக்கள் உணர்ந்து பயன்பெறல் கூடும். இம் முறை யைப் பின்பற்ருமல், தமிழ் மக்களுக்கே புரியாத மொழியில் தமிழகத்துக் கோவில்களில் வழிபாடு நடைபெறுவதால், மன வொருமைப்பாட்டுக்குரிய திருக்கோவில்கள் அப்பணியைச் செய்யத் தவறி யவை ஆகின்றன. ஆதலால் நாட்டிலுள்ள சைவ நன்மக்களும், மக்கள் நலனுக்காக விளங்கும் அர சாங்கமும் இத்துறையில் கவனஞ் செலுத்தி, தமி ழகத்துத் திருக்கோவில்களில் தமிழ் வழிபாட்டினை நடைமுறையில் கொணர்தல் வேண்டும். இங்ங்னம் தமிழில் வழிபாடு நடைபெறும் நன்குளே நம் சைவம் தழைத்தோங்கும் பொன்னுளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/84&oldid=678226" இலிருந்து மீள்விக்கப்பட்டது