பக்கம்:சைவ சமயம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சைவத் திருமுறைகள் - 1

உணவு விடுதி, பலவகை முத்திரைகள், பலவகை யோகிகள் இறப்புக்குப் பின் அடையத்தகும் உல் கங்கள், அவர்கள் தங்கள் உடலங்களை விடும் முறை, இடகலை-பிங்கலை நாடிகள், பிராணன் -புரு ஷன்-அணு, சீவன், பசு, போதம் என்னும் ஆறு, ஐம்புலன்களை அடக்கும் முறை, குருவின் போதனை,

கூடா ஒழுக்கம் முதலியன பேசப்பட்டுள்ளன.

(8) எட்டாம் தந்திரத்தில் உடலின் அமைப்பு, சிவத்தில் கலக்க உடம்பை விடும் முறை, பதினுெரு அவத்தைகள், அறிவுத் தோற்றம், சித்தாந்தத் தின் விளக்கம், பிற சமயங்களுக்கும் அதற்கும் உள்ள தொடர்பு, பதி-பசு-பாச விளக்கம், பிரம னும் மாலும் காணுத சிவன் என்பதற்குரிய தத்துவ விளக்கம், காமம்-வெகுளி. மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள், தத்-த்வம்-அசி என்னும் மூள்று பதங் கள், மூன்று துரியங்கள், மூன்று முக்திகள், மூன்று சொருபங்கள், மூன்று கரணங்கள், மூன்று சூன்யங் கள், காரிய-காரண உபாதிகள், உபசாந்தம், புறங் கூருமை, சிவநிந்தை ஒழிப்பு, அகத்தாமரை பற் றிய வருணனை, தத்துவமசி, அகம் பிாம்மாசி என் பவை பற்றிய ஆராய்ச்சி, உண்மை பேசல், ஆசையை ஒழித்தல், பக்தி வளர்த்தல், தூய்மை அடைவதிலும், விடுதலை பெறுவதிலும் நாட்டம் கொள்ளுதல் முதலியன கூறப்பட்டுள்ளன.

(9) ஒன்பதாம் தந்திரத்தில் குரு, குருமடம், குரு தரிசனம் முதலியன பேசப்பட்டுள்ளன; சிவா னந்த நடனம், சுந்தர நடனம், பொன்னம்பல நட னம், பொன்தில்லை நடனம், ஆச்சரிய நடனம் என் பன விளக்கப்பட்டுள்ளன; அறிவு மலர்தல், உண்மை அறிவின் இன்பம், தன் உருக்காட்சி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/89&oldid=678231" இலிருந்து மீள்விக்கப்பட்டது