பக்கம்:சைவ சமயம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசமயம் 97

சிவபக்தி

ஆரும் தந்திரத்தில் சிவபக்தி நன்கு விளக்கப் பட்டுள்ளது. பாசத்திலிருந்து விடுபட்டு முத்தி யடைய விரும்பும் ஒருவன் பல படிகளைக் கடக்க வேண்டும். முதலில் குருபரன் அவனுக்கு முக்தி வழியைக் காட்டுவான்; அவ்வழியே சென்ருல் சுத்தகுரு தோன்றிக் கடவுள் அருளை நல்குவான். அந்நிலையில் பக்தன் மேற்சொல்லப்பட்ட சித்திகள் யோக சக்திகள் முதலியவற்றை அடைகிருன். அடுத்த நிலையில் சத்-குரு தோன்றிப் பக்தனுடைய ஆணவம்-மாயை.கன்மம் என்னும் மும்மலங்களை அகற்றுவான்; முக்திக்குச் செலுத்துவான். பின் னர்ச் சிவ குரு காட்சியளித்துச் சத், அசத், சத்அசத் என்பவற்றைக் காட்டுவான். இந்த அறிவில் ஆன்மா நிலைத்தபொழுது சிவமாகிறது. சிவ அத்வைதம்

ஆன்மா தான் வேறு, அவன் வேறு என் னும் எண்ணத்தில் இருக்கும் வரையில் த்வைதம்’ அல்லது இருமை இருக்கும். தனிப்பட்ட ஆன்மா அவனில் கலந்துவிடுமாயின், இருமை ஒழிந்து ஒருமை ஏற்படும். இது சிவாத்வைதம் என்ப் படும். சன்மார்க்க மடங்கள் ஏழு

திருமூலர் காலத்தில் ஏழு மடங்கள் சன்மார்க்க சைவத்தைப் பின்பற்றி ஏற்பட்டன. ஒவ்வொன்றி லும் ஒரு குரு இருந்தார். மூலர் (திருமூலர்), காலாங்கர், அகோரர், மாளிகைத் தேவர், நாதாந் தர், பரமானந்தர், போகதேவர் என்னும் எழுவர் மடத்துக் குழுவினர் ஆவர், திருமூலர் மடத்து வழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/96&oldid=678238" இலிருந்து மீள்விக்கப்பட்டது