பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சைவ சமய சாரம்

உயிர்களை வழிபடுங் காலத்துச் சாதிபேதம் முதலியன பாராட்டலாகாதென்று சைவ சமயங் கூறுவதை விரிக்கிற் பெருகும். பெரிய புராணத்துட் போந்துள்ள நாயன்மார் வரலாறுகளால் சைவ சமயம் சாதிபேதம் முதலியவற்றைப் பாராட்டுவதில்லை என்பது நன்கு விளங்கும். சமயாசாரியர்களும் சாதி பேதத்தை மறுத்திருக்கிறார்கள்.

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
கோகிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே
–மாணிக்கவாசகர்

சாத்தி ரம்பல பேசும் கழக்கர்காள்
கோத்தி ரமுங்குல முங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
தரணியொடு வாளைத் தருவ ரேனும்
மங்குவா ரவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேசாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயரால்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவுளாரே
-அப்பர்