பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சைவ சமய சாரம்

அன்பு நெறியை விளக்குவது; உயிர்கள் வழிபாட்டை அறிவுறுத்துவது; எவருங் கொள்வதாயிருப்பது. கொலையைப் போதிக்குஞ் சமயங்களெல்லாம் வளம்பெற்று வளர்கின்றன. கொல்லாமையைப் போதிக்கும் உங்கள் சமயம் என்ன நிலையை அடைந்திருக்கிறது? மெய்கண்ட சாத்திரத்தை வாசிப்போர் எத்தனை பேர்? விபூதி ருத்தி ராட்சம் அணிந்தவருள் எத்துணைப் பேருக்கு அந்நூற்பெயர் தெரியும்? ஜீவகாருண்ணியமன்றோ உங்கள் சமயக் கொள்கை ? அருட்குறிகளாகிய சிவ சின்னங்களைப் பூண்டு, சிவனடியார் என்று நடித்துக் கொலை செய்கிறார் பலர்; புலாலுண்கிறார் பலர். அந்தோ ! கொடுமை !! கொடுமை !!! ஆங்காங்கே சிவனடியார் திருக்கூட்டங்களை ஏற்படுத்துங்கள்; பாடசாலை வைத்தியசாலை முதலிய அறச்சாலைகளை அமையுங்கள்; ஆங்கே ஞான சாத்திர போதனை செய்ய முற்படுங்கள்: ஜீவ காருண்ணிய நெறியை ஓம்புங்கள் : சைவ சமயக் கொள்கையை - அன்பு நெறியை அன்பு நெறியை - ஜீவகாருண்ணி யத்தைப் பரப்புங்கள்; அதற்கு வேண்டிய உதவி புரியுங்கள்.

திருச்சிற்றம்பலம்

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாம்அர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

திருச்சிற்றம்பலம்