பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமரச நிலை

5

தன்மையினார் பழமையழ காராய்ந்து தரிப்பர்
தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந் தறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவர்எ திலருற்[ரே
றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன் றில

என்று ஓதியிருத்தல் காண்க.

தொன்மையுடன் பொருளுண்மையும், சமரசமும்; அன்பும், ஜீவகாருண்யமும் விளங்கும் ஒரு சமயம் நிலவுமேல், அஃது அறிஞர் உடைமையாகும். தொன்மையின்றிச் சமரசம் முதலியன ஒளிரும் சமயமொன்றுளதாயின், அஃதும் அறிஞர்க்குரியதே. தொன்மையோடு பிற பொருள் பொலிதல் பொன் மலரில் நறுமணங் கமழ்வது போலாம். சைவ சமயத்தில் தொன்மையோடு- பொருளுண்மை - சமரசநிலை - முதலியன காணப்படின், அதைப் போற்றவேண்டுவது அறிஞர் கடமை.

எந்தச் சமயம் பிற சமயங்களைப் 'பொய்' என்று தள்ளுகிறதோ அந்தச் சமயம் சிறந்த ஒன்றாகாது. உலகத்தில் தோன்றியுள்ள சமயங்கள் யாவும் மெய்ப்பொருளாகிய கடவுளொன்றையே போற்றுகின்றன. ஒரு கடவுளைப் போற்றுஞ் சமயங்களுள் பொய்ச் சமயம் மெய்ச் சமயம் என்னும் பிரிவு நிகழ்தற்கே இடமில்லை. சைவ சமயம், 'இச்சமயமாகும்; இச்சமயமாகாது' என்று பிரித்துரைப்பதில்லை. இவ்வுண்மையைச் சைவ சமய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமய_சாரம்_1944.pdf/5&oldid=1628840" இலிருந்து மீள்விக்கப்பட்டது