பக்கம்:சைவ சமய சாரம் 1944.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

சைவ சமய சாரம்

சாத்திரமாகிய சிவஞான சித்தியார் நன்கு அறிவுறுத்துகிறது. அது வருமாறு:–

ஓது சமயங்கள் பொருளுணரு நூல்கள்
ஒன்றோடொன் றொவ்வாம லுளபலவும் இவற்றுள்
யாது சமயம் பொருள்நூ லியாதிங் கென்னில்
இதுவாகும் அதுவல்ல வெனும்பிணக்க தின்றி
நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண
நிற்பதுயா தொருசமயம் அதுசமயம் பொருள் நூல்
ஆதலினால் இவையெல்லாம் அருமறையா கமத்தே
அவையிரண்டும் அரனடிக்கீ ழடங்கும் [அடங்கியிடும்

சைவ சமயத்திற் போந்துள்ள சமரசப்பான்மை கண்டே, எவரும் போற்றுந் தாயுமான சுவாமிகளும் அச்சமயத்தை, இராஜாங்கத்திலமர்ந்தது என்றும், அதுவே 'சமயம்' என்றும், அதில் செகத்தவர் அனைவரும் சேரவேண்டும் என்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அத்திருப்பாடல்கள் வருமாறு:–

விண்ணவரிந் திரன் முதலோர் நார தாதி
விளங்கு சப்த ருஷிகள்கன வீணை வல்லோர்
எண்ணரிய சித்தர்மநு வாதி வேந்தர்
இருக்காதி மறைமுனிவ ரெல்லா மிந்தக்
கண்ணகன்ஞா லம்மதிக்கத் தானே யுள்ளங்
கையினெல்லிக் கனிபோலக் காட்சி யாகத்
திண்ணியநல் லறிவாலிச் சமயத் தன்றோ
செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தா ரென்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமய_சாரம்_1944.pdf/6&oldid=1628378" இலிருந்து மீள்விக்கப்பட்டது